ஷிர்டி மற்றும் அகமத்நகர் பகுதியில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஷிர்டி கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். மஜல்காவ் நகராட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப்பட்டது. நாண்டெட் மாவட்டத்தில் அரசு பேருந்துகள் தாக்கப்பட்டதால் பஸ் போக்குவரத்து முடங்கி இருக்கிறது. பீட் பேருந்து நிலையத்திற்குள் சென்ற போராட்டக்காரர்கள் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பஸ்களுக்கு தீவைத்தனர். இச்சம்பவங்களால் 30 அரசு பேருந்து நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இதனால் வெளியூர் செல்லவேண்டிய ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். 4 ஆயிரம் கிராமங்களுக்குள் அரசியல்வாதிகள் வர தடை விதித்துள்ளனர்.
இப்பிரச்னை குறித்து முதல்வர் ஏக்நாத் ஷிண்டே ஆளுநரை சந்தித்து பேசினார். வன்முறையை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார். அதோடு இப்பிரச்னை குறித்து இரவில் முதல்வர் ஷிண்டே துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். இதையடுத்து முதல்வர் ஷிண்டே அளித்த பேட்டியில், “மராத்தா சமுதாயத்திற்கு இரண்டு கட்டமாக இட ஒதுக்கீடு கொடுக்கப்படும்” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து அரசுக்கு ஆலோசனை கொடுக்க மூன்று முன்னாள் நீதிபதிகள் கொண்ட கமிட்டி ஒன்று அமைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அதோடு குன்பி இனத்தவர்களோடு தொடர்புடைய மராத்தாக்கள் என்பதற்கான ஆவணங்களை கொடுத்துள்ள 11,600 பேருக்கு உடனே குன்பி இன சாதிச்சான்றிதழ் கொடுக்க உத்தரவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் இவ்விவகாரத்தில் அரசு சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் இவ்வழக்கு விசாரணைக்கு வரும் போது மராத்தா இன மக்கள் குறித்து எடுக்கப்பட்ட கணக்கெடுப்பு விபரங்கள் தாக்கல் செய்யப்படும் என்றும் முதல்வர் ஷிண்டே தெரிவித்துள்ளார். இந்திய குடியரசுக்கட்சி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கேட்டுக்கொண்டதால் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மனோஜ் ஜராங்கே தண்ணீர் மட்டும் அருந்த ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
