காதலர்களே உஷார்!!! காதலிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த காதலனுக்கு நேர்ந்த சோகம்..

காதலர்களே உஷார்!!! காதலிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த காதலனுக்கு நேர்ந்த சோகம்..

Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION

காதலர்கள் தங்களது அன்பைப் பரிமாறிக்கொள்ளும் மௌனமொழியே முத்தம். இது, உணர்ச்சிகளின் பெரிய குரல். முதல் காதல் எவ்வளவு ஸ்பெஷலோ, அதுபோல் தான் முதல் முத்தமும். காதலை வெளிப்படுத்துவதில் முத்தத்துக்கு ஈடு வேறு எதுவுமில்லை. தங்களின் துணையின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்த வாங்கிக்கொடுக்கும் விலை மிகுந்த பரிசுப் பொருள்களைவிட, ஒரு முத்தம் உணர்த்திவிடும் உங்கள் எல்லையற்ற காதலை! ஆனால் இங்கு ஒருவருக்கு அந்த முத்தமே பிரச்சனையாக மாறியுள்ளது.

ஆம், சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள மேற்கு ஏரியில் காதல் ஜோடி ஒன்று டேட்டிங் சென்றுள்ளனர். அப்போது அங்கு இருவரும் சுமார் 10 நிமிடங்களுக்கு விடாமல் ‘லிப் லாக்’ முத்தம் கொடுத்துள்ளனர். இந்நிலையில், திடீரென காதலனின் காதில் ஊசி குத்துவது போல் வலி ஏற்பட்டுள்ளது. இதுபற்றி அவர் தனது காதலியிடம் தெரிவித்ததையடுத்து அவர்கள் இருவரும் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்துள்ளனர். ஆனால் நேரம் செல்லச்செல்ல காதலனின் அவரின் கேட்கும் திறன் குறைந்துள்ளது.

இதையடுத்து உடனடியாக இருவரும் மருத்துவமனைக்குச் சென்றுள்ளனர். அங்கு காதலனுக்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில், காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியைப் பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்துள்ளது. அதுதான் இதனால் தான் அவருக்கு காது வலி ஏற்பட்டதாக கூறியுள்ளனர். மேலும், ”உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும்” என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

The post காதலர்களே உஷார்!!! காதலிக்கு லிப் லாக் முத்தம் கொடுத்த காதலனுக்கு நேர்ந்த சோகம்.. appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *