தி.மு.க. அரசாங்கத்தின் தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வரும் வகையில் “தி.மு.க. பைல்ஸ்’ வெளியிடப்பட்டுள்ளது. அதில் வெளியிடப்பட்டுள்ள தி.மு.க. அமைச்சர்களின் ஊழல் விவரங்களை மக்கள் விவாதிக்கக்கூடிய அளவிற்கு அவர்களின் முகத்திரை கிழிந்திருக்கிறது. அதன் விளைவாகத்தான், ஊழல் குற்றச்சாட்டில் ஒரு மந்திரி ஜெயிலில் இருக்கிறார், மற்றொரு மந்திரி பெயிலில் உள்ளார். இன்னும் பல மந்திரிகளுக்கு பெயில் எடுக்க அலைந்து கொண்டிருக்கிறார்கள். தி.மு.க. அரசாங்கம் இன்று வீழக்கூடிய அரசாங்கமாக இருக்கிறது. மத்திய அரசு கொடுக்கக்கூடிய பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்காக ஒதுக்கிய நிதியினை, மாநில அரசு ஒதுக்கியதாக சொல்லி மார்தட்டிகொள்கிறார்கள். அந்த நிதியையும் அவர்கள் முறையாக கொடுத்ததாக தெரியவில்லை. தமிழகத்தில் பா.ஜ.க. வளர்ந்துள்ளது. எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழக பா.ஜ.க. 25க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெல்வதற்கான வாய்ப்புள்ளது.
இந்தியா கூட்டணி உருவாவதற்கு முன்னரே ஆங்காங்கே உடைந்து நிற்கிறது. மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என கூறிவிட்டார். ஆம் ஆத்மி கட்சி, பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸூக்கு சீட்டு கொடுக்க மாட்டோம் என தெரிவித்துவிட்டார்கள். தமிழகத்தில் சனாதனத்தை பற்றி பேசியதால்தான் இந்தியா கூட்டணி உடைந்துவிட்டதாக தெரிகிறது.
இந்தியா கூட்டணி உடைந்த கூட்டணிதான், இனி அது ஒன்று சேருவதற்கு வாய்ப்பில்லை. அயோத்தியில், 500 ஆண்டு கனவு இன்று நனவாகி உள்ளது. நடந்து முடிந்த ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை நாடுமுழுவதும் மக்கள் தீபாவளி போல் கொண்டாடி வருகிறார்கள். மக்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். தமிழ்நாட்டிற்காக மோடி சேவை செய்கிறார், அதன் வளர்ச்சிக்காக பாடுபடுகிறார். பாரதப் பிரதமரும், தமிழக பா.ஜ.க.வும் தமிழக மக்களுக்காக போராடி வருகிறார்கள். தமிழகத்தில் பா.ஜ.க.தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமை முடிவெடுக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
