எஸ்.பி தலைமையில் பலத்த பாதுகாப்புடன் பல்கலைக்கழகத்துக்கு வந்தடைந்தார் ஆளுநர். தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பிறகு துணைவேந்தர், சிறப்பு விருந்தினர் பேசி முடித்தவுடன், அனைவருக்கும் பட்டங்களை வழங்கினார் ஆளுநர். அதைத் தொடர்ந்து உரையாற்றுவார் என்று எல்லோரும் ஆர்வமாக எதிர்பார்த்த நிலையில், பட்டம் பெற்றவர்களுக்கு உறுதிமொழியை வாசித்தவுடன், மீண்டும் தேசிய கீதம் பாடப்பட்டு, அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.

ஆளுநர் பேச வேண்டும் என்பது கட்டாயம் இல்லை என்றாலும், கடந்த ஆண்டு பட்டமளிப்பு விழாவில் நீண்ட உரையாற்றினார். அதுபோல் இப்போதும் உரையாற்றுவார், அமைச்சர் பொன்முடியின் விமர்சனத்துக்கு பதில் கூறுவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில், பேசாமல் சென்றுவிட்டார்.
`சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க ஒப்புதல் வழங்காத ஆளுநர் கையால், எங்கள் முனைவர் பட்டத்தைப் பெற மாட்டோம்’ என தமிழ்நாடு அரசுக்கல்லூரி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் சுரேஷ், மூட்டா மண்டலத் தலைவர் ரமேஷ்ராஜ் ஆகியோருடன் 15 சிண்டிகேட், செனட் உறுப்பினர்களும் இந்த விழாவைப் புறக்கணித்து, எதிர்ப்பைப் பதிவுசெய்திருக்கின்றனர். இதை, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சமூக ஊடத்தில் பதிவுசெய்திருக்கிறார்.
நன்றி
Publisher: www.vikatan.com
