இருப்பினும், `காமாட்சி கோயிலில் பஜனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளைச் செய்ய மட்டுமே அனுமதி கோரப்பட்டிருந்தது, எல்.இ.டி திரைகளைக் கொண்டு ராமர் கோயில் நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய அனுமதி கோரப்படவில்லை. அதனால், அதற்கு அனுமதி வழங்கப்படவில்லை’ என காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தெரிவித்திருக்கிறது.
இன்னொருபக்கம், சென்னை பட்டாபிராமில் உள்ள தனியார் மண்டபத்தில் பஜனைகள், அன்னதானம் நடத்த அனுமதி மறுத்த காவல் துறையினரின் உத்தரவை எதிர்த்து விவேகானந்தா இந்து இயக்கத்தின் தலைவர் கணபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடுத்திருந்தார். மேலும், அந்த மனுவில், `எந்த மதத்தை பற்றியும் விவாதிக்கவில்லை, மற்ற மதத்தினர் வசிக்கும் பகுதி என்பதால் இந்த நிகழ்ச்சியை தடுக்க முடியாது’ என மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

நன்றி
Publisher: www.vikatan.com
