மத்தியப் பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 230 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 114 இடங்களிலும், பா.ஜ.க 109 இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் கட்சி கமல்நாத் தலைமையில் ஆட்சியமைத்தது. இருப்பினும் 2020-ம் ஆண்டில் காங்கிரஸில் சிந்தியா தலைமையில் பல எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்ததையடுத்து, காங்கிரஸ் அரசு கவிழ்ந்தது. அதையடுத்து, சிவராஜ் சிங் சௌஹான் தலைமையில் பா.ஜ.க ஆட்சியமைத்தது. மத்தியப் பிரதேசத்தில் பா.ஜ.க-வின் தற்போதைய பலம் 127-ஆக இருக்கிறது.
இந்த முறை என்ன விலை கொடுத்தாவது மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியைத் தக்கவைப்பது என்ற முடிவுடன் பா.ஜ.க தீவிரமாக வேலை செய்திருக்கிறது.

அதே சமயம், `மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும்’ என்கிறார் ராகுல் காந்தி. “தேர்தலில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியமைத்தது. ஆனால், அந்த ஆட்சியை பா.ஜ.க கவிழ்த்துவிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாகப் பெரும் புயல் வீசப்போகிறது. 145 தொகுதிகளிலிருந்து 150 தொகுதிகள் வரை காங்கிரஸ் நிச்சயம் கைப்பற்றும்.
நன்றி
Publisher: www.vikatan.com
