திருப்பதியை போல பழனி முருகன் கோயிலிலும் இதற்கு தடை!… இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!

திருப்பதியை போல பழனி முருகன் கோயிலிலும் இதற்கு தடை!… இந்து சமய அறநிலையத் துறை அதிரடி!

பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குள் கேமரா மற்றும் கேமரா பொருத்திய செல்போன்கள் உள்ளிட்டவற்றை எடுத்துச்செல்ல அக்டோபர் 1 முதல் தடை விதிக்கப்படுகிறது என்று இந்து சமய அறநிலையத் துறை தெரிவித்துள்ளது.

மலையடிவாரத்தில் கைப்பேசிகளை பாதுகாக்கும் மையங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருவதாகவும் கைப்பேசிகளை பாதுகாக்க ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் இந்து அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இதே நடைமுறை அனைத்து கோயில்களிலும் பின்பற்ற சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது.பழனி மலைக்கோயில் உள்பிரகாரத்தில் புகைப்படம், விடியோ எடுக்க அனுமதியில்லை என அறிவிப்பு பதாகை வைத்துள்ள போதிலும், பக்தர்கள் தங்கத்தேர், தங்கக் கோபுரம், கருவறை என அனைத்துப் பகுதிகளிலும் கைப்பேசியைக் கொண்டு படங்கள், விடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் பழனி கோயிலில் மூலவரை கைப்பேசியில் படமெடுத்தது தொடர்பாக பக்தர் ஒருவர் கோயிலின் பாதுகாப்பு குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கோயிலுக்குள் பக்தர்கள் கைப்பேசி கொண்டு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தியதோடு மட்டுமன்றி, அதற்கு திருக்கோயில் நிர்வாகம் செய்துள்ள ஏற்பாடுகள், சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீதான நடவடிக்கை குறித்து கேள்வி எழுப்பியது.

இதையடுத்து பழனி திருக்கோயில் நிர்வாகம் பக்தர்கள் கைப்பேசியை பாதுகாப்பாக வைத்துச் செல்ல வசதியாக பாதுகாப்பு அறைகளை அமைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. திருப்பதி போல பழனி கோயிலில் கைப்பேசிக்கு தடை என்ற அறிவிப்பை இந்து சமய அறநிலையத் துறை வெளியிட்டால், பக்தர்கள் கைப்பேசியை எடுத்து வருவதைத் தவிர்த்து விடுவர். அறைகள் எடுத்து தங்குபவர்கள் அறையில் கைப்பேசியை வைத்து விடுவார்கள். வெளியூரில் இருந்து வரும் பக்தர்கள் கைப்பேசியை வைக்க தனி அறை வழங்கி டோக்கன் கொடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்தே, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் கைப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கும் வகையில், அவற்றைப் பாதுகாக்க அறைகளை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *