இவ்வழக்கில் கைதான அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சௌமியா வழக்கில் துப்பு கிடைத்தது. அஜ்ய என்பவருடன் சேர்ந்து இவர்கள் நான்கு பேரும் செளமியாவின் காரை விரட்டிச் சென்று அவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்தது தெரிய வந்தது. அதோடு சேதி என்பவரும் இச்சம்பவத்திற்கு உதவி செய்திருந்தது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.
செளமியாவின் காரில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி தோட்டா, கைதான நான்கு பேரிடம் பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கியுடன் ஒத்துப்போனது. அதோடு செளமியாவை விரட்ட பயன்படுத்திய அவர்களது காரும் பறிமுதல் செய்யப்பட்டது. குற்றவாளிகள் சம்பவம் நடந்தபோது சம்பவ இடத்தில் இருந்தனர் என்பதை நிரூபிக்க அவர்களது மொபைல் போன் சிக்னல்கள் உதவின.
கைது செய்யப்பட்ட நான்கு பேரும், இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு, தனியாக கார்களில் செல்லும் டாக்சி டிரைவர்கள் மற்றும் பெண்களிடம் கொள்ளையடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தனர் என்பது விசாரணையில் தெரிய வந்தது. 2011-ம் ஆண்டு குற்றவாளிகள் ஜாமீனில் வந்துவிடக்கூடாது என்பதற்காக அவர்கள் மீது டெல்லி போலீஸார் பிரத்யேக சட்ட நடவடிக்கை எடுத்தனர். இவ்வழக்கு விசாரணை கடந்த 15 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.
இதில் கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றம் குற்றவாளிகள் மீதான குற்றத்தை உறுதி செய்தது. தற்போது குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது. ஆனால் அக்கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம், ’இது அரிதான குற்றம் இல்லை’ என்று தெரிவித்தனர். மேலும் இக்கொலையில் தொடர்புடைய அஜய் சேதிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இத்தீர்ப்பு குறித்து செளமியாவின் பெற்றோர், “‘தீர்ப்பு எங்களுக்கு திருப்தியளிக்கிறது. ஆனால் மகிழ்ச்சியளிக்கவில்லை. எங்கள் மகள் திரும்பி வர மாட்டார்’’ என்று தெரிவித்துள்ளனர்.
நன்றி
Publisher: www.vikatan.com
