அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள், “எண்ணெய் பரவல் முழுமையாக தடுக்கப்படவில்லை, எண்ணெய் உறிஞ்சும் அட்டைகளையும், தடுப்பாண்களையும் சரியான நேரத்தில், போதுமான அளவில், தேவையான இடங்களில் பயன்படுத்தவில்லை” என குற்றம்சாட்டினர். இதற்கு CPCL தரப்பில், எண்ணெய் பரவல் உள்ள பகுதியை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால், “முகத்துவாரம் முழுவதுமாக தடுப்புகளால் மூடப்படவில்லை என்பதை ஏன் அரசும் CPCL-ம் தெரிவிக்கவில்லை” என தீர்ப்பாய உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர். மேலும், “தாமதம் ஆக காரணமானவர்கள் மீது கடுமையாக அபராதம் விதித்து, படகுகள், ஆட்களை அதிகப்படுத்தி விரைவாக பணியை முடிக்க வேண்டும். ஒரு எண்ணெய் உறிஞ்சும் அட்டை 15 நிமிடங்களில் உறிஞ்சக்கூடிய நிலையில், இத்தனை நாட்களில் எத்தனை அட்டைகளை பயன்படுத்தி இருக்கலாம். CPCL இதனை செய்ய தவறியது ஏன் என புரியவில்லை? மீனவர்கள் எண்ணெய் அகற்றும் பணியில் உள்ள போது மணலியில் தொழிற்சாலைகளில் உள்ள சங்கத்தினர் எவரும் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடாதது அதிருப்தி அளிக்கிறது” என தெரிவித்த தீர்ப்பாயம், டிசம்பர் 17ம் தேதிக்குள் எண்ணெய் அகற்றும் பணிகளை முடித்து, டிசம்பர் 18ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை தள்ளிவைத்தனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
