தொடர்ந்து பேசிய தலைமைச் செயலக வட்டாரங்கள், “செல்வப்பெருந்தகை அப்பாயிண்ட்மென்ட் வாங்கியது உண்மைதான். ஆனால் அமைச்சர் பொன்முடி விவகாரம், நிர்மலா சீதாராமன் பேட்டி, அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரனின் தாயார் மறைவு போன்ற செய்திகளால் அப்செட்டில் இருந்தார். எனவேதான் தலைமை செயலகத்திற்கு வரவில்லை. அழகிரியை திட்டமிட்டு புறக்கணிக்கவில்லை” என்றன.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சீனியர் கதர்கள், “நாடாளுமன்ற தேர்தல் வரையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக தானே இருந்துகொள்கிறேன். அதற்கு அகில இந்திய தலைமையிடம் சிபாரிசு செய்யுங்கள் என முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்து வருகிறார் கே.எஸ்.அழகிரி. ஆனால் அதற்கு முதல்வர் பிடிகொடுக்கவில்லை. ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் பொறுப்புக்கு பீட்டர் அல்போன்ஸை திமுக தலைமை பரிந்துரைத்தது. அப்போது ராகுல் காந்தி, ‘இது எங்களது கட்சி விவகாரம்’ என மறுத்து விட்டார். இதேபோல் சமீபத்தில் நடந்த கக்கன் பிறந்தநாள் விழாவில் முதல்வரை காக்க வைத்ததுடன், பாதாம் பருப்பு மாலை அணிவித்து சர்ச்சையானது. எனவேதான் அழகிரியையும், கோப்பண்ணாவையும் சந்திக்க முதல்வர் விரும்பவில்லை. மாலையில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் பங்கேற்றிருப்பதை நம்மால் பார்க்கமுடிகிறது” என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
