தொடர்ச்சியாக கண்டனம் வந்த நிலையில் ட்வீட்டை நீக்காமல் அதை சமாளிப்பதற்காக குஷ்பு கொடுத்த விளக்கம் இன்னும் முகம் சுழிக்க வைத்தது. அதாவது, “எனது ட்வீட்டை பார்த்தை சீற்றமெடுக்கும் கூட்டத்தைப் பார்த்தால் எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. அவர்களுக்கு ஒன்றை சொல்லித்தருகிறேன். `சேரி’ என்பது பிரஞ்சு மொழியில் `அன்பானவர் அல்லது நேசிப்பவர்’ என்று பொருள்படும் ஒரு வார்த்தை. நான் அந்த சூழலில் அந்த அர்த்தத்தில்தான் கூறினேன்” என ஒரு விளக்கம் அளித்தார்.
அதற்கு பலரும் பலவிதமாக ஒவ்வொரு மொழியில் உள்ள பிற அர்த்தங்களை பதிவிட்டு, `குஷ்புக்கு சரியாக முட்டுக்கொடுக்க கூடத் தெரியவில்லை! ஒழுங்காக மன்னிப்பு கேளுங்கள்!’ என அவர் பாணியிலேயே கண்டனம் தெரிவித்தனர். அதையெல்லாம் கண்டுகொள்ளாத குஷ்வு சிரிப்பு எமோஜிக்களை மட்டும் தனது எக்ஸ் தளத்தில் பதிலாக கொடுத்து சமாளித்தார்.
இந்த நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பட்டியல் அணித் தலைவர் ரஞ்சன் குமார் “விஷமத் தனமான பேச்சுக்கு குஷ்பு பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். நாளை மாலை 5 மணிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால், அவரது வீடு முற்றுகையிடப்படும். தமிழகத்தில் அவர் எங்கும் நடமாட முடியாது. பட்டியல் சமூகத்தை கொச்சைப்படுத்தும் வகையில் குஷ்பு ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருக்கிறார். மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு ஏன் குரல் கொடுக்கவில்லை? பா.ஜ.க என்ற சாக்கடையில் சேர்ந்ததால், குஷ்பு இப்படி பேசுகிறார். அவர் மன்னிப்பு கேட்காவிட்டால் அவர்மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்போம்!” எனத் தெரிவித்தார். இதையடுத்து சென்னை சாந்தோமில் உள்ள நடிகை குஷ்புவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
