அது குறித்துப் பேசியபோது, மாநிலத்தின் தேசிய சுகாதார இயக்க மையங்களுக்கான “குடும்ப ஆரோக்ய கேந்திரம்’ என்ற பெயரை நீக்கிவிட்டு ‘ஆயுஷ்மான் ஆரோக்யா மந்திர்’ என்று பெயர் மாற்ற வேண்டும் என வலியுறுத்துகிறது. இந்தப் பெயர்மாற்ற அறிவிப்பு கடந்த மாதம்தான் வந்தது. ஏற்கெனவே, இந்த ஆண்டுக்கான விளம்பரப் பணிகள் 99 சதவிகிதம் முடிந்து விட்டது. ஆனாலும் இந்த பெயர் மாற்ற முடிவை ஏற்க முடியாது.
மத்திய அரசு வலியுறுத்தும் அந்தப் பெயர், கேரள மக்களின் கலாசாரம் மற்றும் மாநில மொழியுடன் பொருந்தாமல் இருப்பதாலும், கிராமப்புற மக்களுக்குப் புரியாத வகையில் உள்ளதாலும், பெயர் மாற்றத்திற்கு கேரள அரசு சம்மதிக்கவில்லை. அதனால் இந்த மானியத் தொகையை விடுவிக்காமல் மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது. இதனால், நோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
அமைச்சரின் இத்தகைய பேச்சைத் தொடர்ந்து, `அந்தத் திட்டத்துக்கு மத்திய அரசு கூறும் பெயரை மாற்ற மாநில அரசு மறுப்பதால்தான், மத்திய அரசு சுகாதாரத் திட்டத்துக்கு விடுவிக்க வேண்டிய நிதியை நிறுத்திவைத்து, அரசியல் செய்கிறது’ என்ற விமர்சனம், அரசியல் அரங்கில் எழுந்திருக்கிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
