தமிழ்நாடு – கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை வெடித்துள்ளது. கர்நாடகாவில் போதிய மழை இல்லை எனக்கூறி தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை தர மறுத்து வருகிறது. இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தை நாடியது. இதில் தமிழகத்துக்கு சாதகமான உத்தரவுகள் வந்தன
இந்நிலையில் தான் கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் தலைமையிலான கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றார். இதற்காக பெங்களூரில் இருந்து அத்திப்பள்ளியை கடந்து தமிழகத்திற்குள் நுழைய முயன்றனர். இதையடுத்து கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்த வேளையில் வாட்டாள் நாகராஜ் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஓசூர் மற்றும் ஊட்டியை கர்நாடகாவுடன் இணைக்க வேண்டும் எனக்கூறி சர்ச்சையை கிளப்பினார். காமராஜ் நாடார் காலத்தில் சில மாறுபாடுகள் ஏற்பட்டதால் ஓசூர் தமிழகத்துக்கு சேர்ந்துவிட்டது. சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் புறசபை முன்பு நான் சத்தியாகிரஹம் நடத்தினேன். ஓசூர் கர்நாடகாவுக்கு சேர வேண்டும் என கூறினேன். ஓசூர் கர்நாடகாவுடன் சேர்வது நல்லது. மேலும் பெங்களூருடன் சேர்ந்து வளர்ந்து வரும் பிரதேசமாக ஓசூர் கர்நாடகாவுடன் சேருவது நல்லது என கூறினார்.
நன்றி
Publisher: 1newsnation.com
