தொடர்ந்து கனிமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்தியில் ஆட்சியில் இருக்கக்கூடிய பா.ஜ.க.அரசு, எதிர்க்கட்சியை ரெய்டுகள், அமலாக்கத்துறை மற்றும் சி.பி.ஐ. மூலம் மிரட்டி வருகிறது. இதுபோன்ற செயலுக்கு திராவிட இயக்கம் ஒருபோதும் பயப்படாது. நடைபெற்று முடிந்திருக்கிற 5 மாநில தேர்தல் முடிவுகள் ‘இந்தியா’ கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கும்” என்றார்.

கனிமொழி எம்.பி.யிடம், ‘இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிக்கப்படுவாரா? எனக்கேள்வி கேட்டதற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் அடுத்து வெகு சீக்கிரத்தில் நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் தலைவர்கள் கலந்தாலோசித்து பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்து அறிவிப்பார்கள்” என பதில் கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
