தூங்கும்போது செல்போனை அருகில் வைத்து சார்ஜ் போட வேண்டாம் என ஆப்பிள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சார்ஜ் போடப்பட்டிருக்கும் மொபைல் போன் அருகில் இருக்கும் போது தூங்குவதால் சில அபாயங்கள் ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. மின்சார ஷாக், தீ விபத்து ஆகியவை ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும், தூங்கும் போது அருகில் செல்போனை சார்ஜ் போட வேண்டாம் என்றும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.
அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காமல் தவிர்க்க நல்ல காற்றோட்டமான இடத்தில் சார்ஜ் செய்வதை உறுதி செய்யுமாறும் ஆப்பிள் நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த எச்சரிக்கை ஆண்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பயனர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், மூன்றாம் தரப்பு உற்பத்தியாளர்களிடம் இருந்து சார்ஜர்கள் வாங்கிப் பயன்படுத்துவதை பயனர்கள் தவிர்க்க வேண்டும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. ஏனென்றால், இவை பாதுகாப்பான ஐபோன் சார்ஜிங்கிற்கு சரியான அளவு மின்னழுத்தத்தை கொடுக்காது. சார்ஜ் செய்யும் போது பாதுகாப்பு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சேதமடைந்த கேபிள்களில் இருந்து விலகி இருக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com
