உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க், தொழிலாளர் பற்றாக்குறையை சந்தித்து வருகிறது. அங்கு ஏராளமான வேலை வாய்ப்புகள் இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அது தொடர்பான பதிவு தான் இது..
உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக ஐரோப்பிய கண்டத்தில் உள்ள லக்சம்பர்க் உள்ளது. ஆனால் இப்போது இங்கு திறமையான தொழில் வல்லுநர்களுக்கு பெரும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. லக்சம்பர்க் அரசு இந்தக் குறைபாட்டைப் போக்க முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு நாடுகளில் இருந்து வேலைக்கு ஆட்களை கொண்டு வருவதற்கு இணக்கமாக புதிய சட்டத்தையே கொண்டு வந்துள்ளது அந்நாட்டு அரசு. ஃப்ளையிங் அபார்ட் என்ற நிறுவனம் இது தொடர்பான வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவின் படி லக்சம்பர்க் நாட்டில் அதிகபட்சமாக ஆண்டுக்கு சுமார் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. அமலுக்கு வந்துள்ள புதிய சட்டத்தால் லக்சம்பர்க்கில் வேலை கிடைப்பது இன்னும் எளிதாகிவிட்டது.
ஏனெனில் அங்கு நிலவும் தொழிலாளர் பற்றாக்குறையை போக்க அந்நாட்டு அரசு முயற்சி எடுத்து வருகிறது. முன்னதாக, ஐரோப்பிய குடிமக்களுக்கு லக்சம்பர்க்கில் அனைத்து விதமான வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த முன்னுரிமை நீக்கப்பட்டுள்ளது. அனைத்து நாட்டு மக்களும் எளிதாக லக்சம்பர்க்கில் வேலை பெறும் வகையில் புதிய சட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புதிய சட்டத்தின் படி, லக்சம்பர்க் நாட்டில் வேலைக்கு சேரும் நபர் தன்னை சார்ந்தவர்களை அழைத்து வந்தால் அவர்கள் எந்த வேலைக்கோ அல்லது வணிகத்திற்கோ தனியாக விசா பெற வேண்டியதில்லை. புதிய சட்டத்தின்படி ஒருவருக்கு இங்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 5 நாட்களுக்குள் விசா வழங்கப்படும்.
இதையும் படிங்க : பறவைகளுக்கு நடுவே மறைந்திருக்கும் பென்குயினை கண்டுபிடிங்க பார்ப்போம்… உங்களுக்கு 5 விநாடிகள் தான் டைம்
அதே சமயம், படிப்புக்குப் பிறகு வேலை தேடுவதற்கான விசாவின் காலம் அதிகரிக்கப்பட்டுள்ளது. லக்சம்பர்க் ஐடி நிறுவனங்களின் மையமாக இருப்பது தெரிந்ததே. ஐடி நிறுவனங்களில் வேலை கிடைத்தால் ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் முதல் 65 லட்சம் வரை சம்பளம் பெற வாய்ப்புள்ளது. அதே சமயம் அனுபவம் அதிகமாக இருப்பவர்களுக்கு சம்பளம் ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை இருக்கும். கூடுதலாக நீங்கள் லக்சம்பர்க் மொழியைக் கற்றுக்கொண்டால், அது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இப்படி வேலைக்கு ஆட்களை எளிதாக கொண்டு வரும் வகையிலான புதிய சட்டம் செப்டம்பர் 2023 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. லக்சம்பர்க் நாடு உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. உலக நாடுகளில் குழந்தைகளை வளர்க்க சிறந்த இடங்களில் இதுவும் ஒன்று.
Follow @ WhatsApp : வாட்ஸ் அப் -ல் நியூஸ்18 தமிழ்நாடு செய்திகளை பெற இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தொழிலாளர் பற்றாக்குறையால் இப்போது பல்வேறு நாட்டு மக்களுக்கும் வேலை வாய்ப்பை வழங்க தயாராக இருக்கிறது லக்சம்பர்க் நாடு… வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
நன்றி
Publisher: tamil.news18.com
