வசூலில் படு அடி வாங்கிய ’ஜவான்’..!! இப்படியே போன கண்டிப்பா கஷ்டம் தான்..!!

வசூலில் படு அடி வாங்கிய ’ஜவான்’..!! இப்படியே போன கண்டிப்பா கஷ்டம் தான்..!!

இயக்குனர் அட்லீ, தனது முதல் படமான ராஜா ராணி படத்திலேயே ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். இப்படம் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இதையடுத்து, விஜய்யுடன் இணைந்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கினார். நடிகர் விஜய்யுடன் இணைந்து அடுத்தடுத்து ஹாட்ரிக் படங்களை கொடுத்த ஒரே இயக்குநர் அட்லி தான்.

தற்போது பாலிவுட் பக்கம் சென்றுள்ள இவர், ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ என்ற படத்தை இயக்கியிருந்தார். தமிழ் மற்றும் ஹிந்தியில இப்படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியான நாள் முதல் நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. எல்லா மொழிகளிலும் படத்திற்கான வசூலும் அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் படத்தின் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, ஜவான் திரைப்படம் வெளியாகி இரண்டு நாள் முடிவில் ரூ. 1.50 கோடி வரை வசூலித்துள்ளதாம். ரூ. 2 கோடி என்பது 25% தான் என்கின்றனர். இப்படியே போனால் படம் கண்டிப்பாக நஷ்டத்தை சந்திக்கும் என்கின்றனர். படம் லாபம் அடைய ரூ. 17 கோடி வரை வசூலிக்க வேண்டுமாம், ஆனால் அது கண்டிப்பாக கஷ்டம் என்று கூறி வருகின்றனர்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *