அதைத்தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, “இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த விமான நிலையத்துக்குச் சென்றேன். அப்போது ஒரு அறைக்குள் நான் அடைக்கப்பட்டேன். அங்கு பிரதமர் மோடி இருந்தார். அந்த அறையை விட்டு வெளியேறவே நான் போராட வேண்டியிருந்தது. அது மிகவும் அருவருப்பாக இருந்தது” என்றார்.

அடுத்து, அதானி குறித்து பேசிய சத்ய பால் மாலிக், “அதானி பெரிய பெரிய குடோன்களை கட்டினார், தானியங்கள் உட்பட பயிர்களை விலைக்கு வாங்கினார் என்பதற்காக குறைந்தபட்ச ஆதரவு விலையை (MSP) அரசு காப்பாற்றத் தவறிவிட்டது. அடுத்த ஆண்டு அவற்றின் விலை அதிகரிக்கும். அப்போது அதானி அவற்றை விற்பனை செய்வார்.

இதுவே குறைந்தபட்ச ஆதரவு விலை அமல்படுத்தப்பட்டால், ஒரு விவசாயி தனது பொருட்களை மலிவான விலையில் அவர்களுக்கு விற்க மாட்டார்கள். இன்னொருபக்கம், அரசாங்க பணம் அனைத்தும் அதானியிடம் இருப்பதாக மக்கள் கூறுகிறார்கள்” என்றார்.
மேலும் மணிப்பூர் விவகாரம் பற்றி பேசிய சத்ய பால் மாலிக், “மணிப்பூரின் நிலைமைக்கு அரசின் தோல்வியே காரணம். இன்றுவரை முதலமைச்சர் ஒன்றுமே செய்யவில்லை. அவர் நீக்கப்படவுமில்லை. மணிப்பூரை அவர்கள் (பா.ஜ.க) தொந்தரவு செய்துவிட்டார்கள். ஆனால், இவையெல்லாம் இன்னும் ஆறு மாதங்களுக்குத் தான். என்னால் எழுதிக் கொடுக்கவே முடியும். அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டார்கள்” என்று கூறினார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
