Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
பாலிவுட் கிங் ஷாருக்கான் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்ஷன் திரைப்படமான ‘ஜவான்’ இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இத்திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரைப்பட விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், பலர் ஷாருக்கானின் முந்தய படமான ‘பதான்’ படத்தை போல், இந்த படமும் ரூ.1,000 கோடி வசூல் சாதனை செய்யும் என கூறி வருகின்றனர்.
ஆனால் துரதிஷ்ட வசமாக ‘ஜவான்’ வெளியாகி 24 மணிநேரம் கூட இன்னும் ஆகாத நிலையில், டோரண்ட், தமிழ் ராக்கர்ஸ், டெலிகிராம் மற்றும் மூவிருல்ஸ் ஆகியவற்றில் எச்டி பதிவிறக்கத்தில் ஜவான் படம் ஆன்லைனில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் இயக்குநர் அட்லீ மற்றும் நடிகரும், இந்த படத்தின் தயாரிப்பாளருமான ஷாருக்கான் உள்ளிட்டோரை உச்சகட்ட அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
திருட்டுத்தனமாக ஆன்லைனில் ‘ஜவான்’ திரைப்படம் வெளியாகியுள்ளதால், இப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் பாதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அதே நேரம் சமீப காலமாக தரமான படங்கள் ஆன்லைனில் வெளியான போதிலும் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று வருவதால், பெரிதாக பாதிப்பு இருக்காது என்றே நம்பப்படுகிறது
The post ”பாக்ஸ் ஆபிஸில் மரண அடி வாங்கப்போகுது”..!! அதிர்ச்சியில் ஷாருக்கான், அட்லீ..!! நடந்தது என்ன..? appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
