இத்தாலி பிரதமர் மெலோனி, திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும், செய்தியாளரான ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ என்ற அவரின் காதலருடன் சுமார் 10 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு ஏழு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ, “பெண்கள் அதிகமாகக் குடிக்காமலிருந்தால் வன்கொடுமையில் இருந்து தப்பிக்க முடியும். நீங்கள் பார்ட்டிக்கு சென்றால்… கண்டிப்பாக மது குடிப்பீர்கள். ஆனால் அளவுக்கு அதிகமாகக் குடித்துவிட்டு உங்கள் உணர்வை இழக்கும் போதுதான் பிரச்னை வருகிறது. இதைச் செய்யாமல் இருந்தால் எல்லா பிரச்னையையும் தவிர்க்கலாம்” என்று கூறியிருந்தார்.

அவர் பேசிய இந்தக் கருத்துகள் இணையத்தில் சர்ச்சையானது. பாதிக்கப்பட்ட பெண்ணையே குற்றவாளி ஆக்குவது போல இவரது கருத்துகள் இருப்பதாக பெரும் சர்ச்சை கிளம்பியது. இந்த நிலையில், இத்தாலிப் பிரதமரின் காதலர் ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ வேறு ஒரு பெண்ணுடன் உறவில் இருப்பது போலவும், ஆபாசமாக அந்தப் பெண்ணிடம் பேசிய பேச்சுக்களும் செய்தியாக வெளியானது. இது சமூகவலைதளங்களில் பேசுபொருளானது. அதைத் தொடர்ந்து, தன் காதலன் ஜியாம்ப்ருனோவை விட்டுப் பிரிவதாக இத்தாலிப் பிரதமர் மெலோனி அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில், “சுமார் 10 ஆண்டுகள் நீடித்த ஆண்ட்ரியா ஜியாம்ப்ருனோ உடனான எனது உறவு இப்போது முடிகிறது. கடந்த சில காலமாகவே எங்கள் கருத்துகள் மாறிவிட்டன. பாதைகள் பிரிந்துவிட்டன. அதை ஒப்புக்கொள்ளும் நேரம் இப்போது வந்துவிட்டது. நாங்கள் கழித்த இந்த காலத்தையும் எங்கள் நட்பையும் நான் நிச்சயம் பாதுகாப்பேன். எங்களை நேசிக்கும் எங்கள் ஏழு வயதுக் குழந்தையை நான் நிச்சயம் பார்த்துக் கொள்வேன். இதற்குமேல் இதைப் பற்றி நான் சொல்வதற்கு எதுவுமில்லை” என்று பதிவிட்டிருக்கிறார்.

இதற்கிடையே ஜியாம்ப்ருனோ தொடர்பான வேறு சில வீடியோக்களும் வெளியாகியிருக்கின்றன. அதில் அவர் தனது சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக நடந்து கொள்கிறார். அதேபோல மற்றொரு ஆடியோவில், தன்னுடன் செக்ஸ் பார்ட்டியில் கலந்து கொள்ளும் பெண் ஊழியர்கள் மட்டுமே தன்னுடன் வேலை செய்யலாம் என்று அவர் கூறுவது போன்ற ஆடியோ வெளியானது அதைத் தொடர்ந்தே இத்தாலிப் பிரதமரின் இந்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com