தமிழகத்தில் பெண்களின் கல்வியை ஊக்குவிக்கவும், அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தவும், அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மக்களிடையே அதிக வரவேற்பை பெற்ற திட்டம் தான் “மகளிர் உரிமைத்தொகை திட்டம்”. இந்த திட்டம் மூலம் மகளிருக்கு மாதம் ரூ.1000 அவர்களுடைய வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த திட்டமானது கடந்த மாதம் முதல் தொடங்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தை போலவே கர்நாடக மாநிலத்திலும் பெண்களுக்கு மாதம் ரூ. 3,000 வழங்க உள்ளதாக அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். கர்நாடக மாநிலத்தில் வருகிற நவம்பர் 30 ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பிஆர்எஸ் கட்சி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அளித்து வருகிறது.
Also Read : உச்சத்தில் மின்கட்டணம்… தொழிலாளர்கள் நடத்தும் உண்ணாவிரத போராட்டம்..! செவி சாய்க்குமா தமிழக அரசு?
இதையடுத்து, பிஆர்எஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தற்பொழுது வெளியாகியுள்ளது. அந்த தேர்தல் அறிக்கையில், பிஎஸ்ஆர் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.3000 வழங்கப்படும் எனவும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வெள்ளை ரேஷன் அட்டைதாரர்களுக்கு எல்ஐசி மூலம் 5 லட்சம் ஆயுள் காப்பீடு வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும், மூத்த குடிமக்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் விதைகளுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5,000 ஆக உயர்த்தப்படும், ஏழைப் பெண்களுக்கு ரூ.400 க்கு சிலிண்டர் வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி
Publisher: jobstamil.in