ஆனால் அரசியலமைப்பின் தற்போதைய கட்டமைப்பிற்குள் ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்துவது சாத்தியமில்லை. “ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்ற முறை பின்பற்றப்பட வேண்டுமானால், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் தொடர்புடைய விதிகள் உள்ளிட்ட குறைந்தபட்சம் ஐந்து சட்டப் பிரிவுகளில் திருத்தம் செய்யப்பட வேண்டும். அப்போதுதான் ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாகும்” எனக் குறிப்பிட்டிருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய நாடாளுமன்ற முன்னாள் பொதுச் செயலாளர் பி.டி.டி ஆச்சாரி, “ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமாக வேண்டுமானால், நாடாளுமன்றத்தை குடியரசுத் தலைவர் கலைப்பது, மாநில சட்டமன்றங்களைக் கலைப்பது, சட்டப்பிரிவு 356 மாநிலங்களில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது உள்ளிட்ட சட்டங்களில் திருத்தம் கொண்டு வர வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் நேர்கோட்டில் கொண்டு வருவதே மிகப்பெரிய சவாலான விஷயம்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இவை அனைத்தையும் கடந்து ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் சாத்தியமாகுமா என்பதை எதிர்வரும் அரசியல் நிகழ்வுகள் தான் மூலம் தான் தெரிய வரும்.!
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
