முதல் வாரமே குறும்படமா..? விசித்ராவை பயங்கரமாக திட்டிய ஜோவிகா..!! சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!!

முதல் வாரமே குறும்படமா..? விசித்ராவை பயங்கரமாக திட்டிய ஜோவிகா..!! சூடுபிடிக்கும் பிக்பாஸ் வீடு..!!

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த அக்.1ஆம் தேதி தொடங்கியது. இந்த சீசனில் கூல் சுரேஷ், பவா செல்லதுரை, சரவண விக்ரம், விசித்ரா, நிக்ஸன், ஐஷூ, விஜய் வர்மா, அனன்யா ராவ், யுகேந்திரன் வாசுதேவன், பிரதீப் ஆண்டனி, விஷ்ணு விஜய், பூர்ணிமா ரவி, மாயா கிருஷ்ணா, ஜோவிகா விஜயகுமார், மணி சந்திரா, ரவீனா தாஹா, அக்‌ஷயா உதயகுமார், வினுஷா தேவி ஆகிய 18 போட்டியாளர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

ஆரம்பித்த நாளிலிருந்து வித்தியாசமான டாஸ்க்குகளை பிக்பாஸ் கொடுத்து வருவதால் அடிக்கடி போட்டியாளர்களுக்கு இடையே மோதல், கலவரம் வெடித்து வருகிறது. இன்றைய தினம் போட்டியாளர்கள் செருப்பால் அடிப்பேன், மூக்கு உடைந்திடும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை அறிய அனைவரும் ஆவலாக உள்ளனர்.

இந்நிலையில், இன்றைய நாளுக்கான 3-வது ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில், விசித்திரா தன்னை 12-வது படித்து முடித்தே ஆக வேண்டும் என்று என்னைத் தான் சொன்னாரு என்று ஜோவிகா சொல்ல, விசித்திராவோ உன்னோட அம்மா சொன்னால் கேட்கமாட்டியா என்று கேட்க, என்னைப் பற்றி மட்டும் பேசுங்க என் குடும்பத்தைப் பற்றி பேசாதீங்க என்று சொல்லி விட்டு கோபமாக செல்கிறார் ஜோவிகா.

Bigg Boss Tamil Season 7 | 6th October 2023 - Promo 3

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *