"முழு உ.பி, பீகாரை இழிவுபடுத்துவது

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய தி.மு.க எம்.பி-யும் முன்னாள் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், ஆங்கில கல்வியின் முக்கியத்துவம் குறித்துப் பேசிய போது, “இந்தி மட்டுமே படித்த உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் வீடுகள் கட்டும், சாலைகள் போடும், கழிவறையைச் சுத்தம் செய்யும், குறைவான சம்பளத்துக்குரிய வேலையைச் செய்கிறார்கள்.

தயாநிதி மாறன்

ஆனால், தாய்மொழியுடன் ஆங்கிலம் கற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மரியாதைக்குரிய சம்பளம் கிடைக்கு வேலைகளைச் செய்கிறார்கள்” எனப் பேசிய வீடியோ சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவியது. இந்தக் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனங்கள் வலுத்துவருக்கிறது.

இந்த நிலையில், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், “தி.மு.க எம்.பி சாதிய அக்கிரமங்களை முன்னிலைப்படுத்தி, சில சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதுபோன்ற அபாயகரமான வேலைகளில் ஈடுபட்டதை அவர் சுட்டிக்காட்டியிருந்தால், அது அர்த்தமுள்ளதாக இருக்கும். ஆனால் பீகார் மற்றும் உ.பி.யின் ஒட்டுமொத்த மக்களையும் இழிவாகப் பேசுவது கண்டிக்கத்தக்கது.

தேஜஸ்வி யாதவ்

அதைக் கண்டிக்கிறோம். நாட்டின் பிற பகுதிகளிலிருந்து வருபவர்களிடம் மக்கள் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். சமூக நீதிக்கான எங்கள் இலட்சியத்தைப் பகிர்ந்து கொள்ளும் கட்சியாக தி.மு.கவை பார்க்கிறோம். அதன் தலைவர்கள் இலட்சியத்திற்கு எதிரான விஷயங்களைப் பேசுவதைத் தவிர்க்க வேண்டும்” எனத் தெரிவித்திருக்கிறார்.

இதற்கு முன்னர் பா.ஜ.க எம்.பி-யும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், “பீகார் மக்களை அவமதிப்பதை நிறுத்துங்கள். இந்தியக் கூட்டணியை உருவாக்கிய பீகார் முதல்வர் நிதிஷ் குமாரின் ஆட்சியின் நிலை காரணமாகப் பீகாரிலிருந்து தொழிலாளர்கள் இடம்பெயர்கின்றனர்.

ரவிசங்கர் பிரசாத்

யாராவது சுயமாக உழைத்து உண்டால் அவர்களை இப்படி அவமானப்படுத்துவீர்களா?… இந்துஸ்தான் ஒன்றுபட்டது, யார் வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம்” எனத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பாஜக தலைவர்கள் சிலர், `இந்தியா கூட்டணி தலைவர்கள், திமுக எம்.பியின் பேச்சை ஏற்கிறார்களா? என்பது குறித்து பதிலளிக்க வேண்டும்’ என கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Facebook
Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *