Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
இந்தியா பாகிஸ்தான் ஆட்டத்தின்போது மழை குறுக்கிட்டது, அப்போது மைதான ஊழியர்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் வீரர் செய்த செயல் இணையத்தில் பாராட்டு மழையில் நனைத்து வருகிறது
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியின் சூப்பர்4 சுற்றில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பமோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் கில் இருவரும் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர்களை வெளுத்து வாங்கினர்.
இந்தியாவின் முதல் விக்கெட் 16.4 ஓவர்களில் 121 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விழுந்தது, அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோஹித் ஷர்மா 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை பறிகொடுத்தார், அவரைத்தொடர்ந்து அடுத்த ஓவரே(17.5) கில்லும் 58 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு விராட் கோலியுடன் ( 16 பந்துகளில் 8 ரன்கள்) அட்டமிழக்காமல் ஆடி வருகிறார் கே.எல்.ராகுல் ( 28 பந்துகளில் 17 ரன்கள்). இப்படி போட்டி விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் 24.1ஓவரில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டுள்ளது.
அப்போது மழையின் வேகம் அதிகமானதால் மைதான ஊழியர்கள் ஆடுகளத்தை மூட தார்ப்பாயை எடுத்து செல்லும் போது அவர்களுக்கு உதவும் வகையில் பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஃபகார் ஜமானும் அந்த தார்ப்பாயை இழுத்துக்கொண்டு சென்றார், இதை பார்த்த அனைவரும் அவரது செயலை பாராட்டி வருகின்றனர். இது இணையத்திலும் வேகமாக பரவி அனைவரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
மழையால் ஆட்டம் குறிக்கிட்டபோது இந்திய அணி 24.1 ஓவர்களில் 2விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான், அப்ரிடி ஆகியோர் தல ஒரு விக்கெட்டுகளை எடுத்துள்ளனர்.
The post INDvsPAK: குறுக்கிட்ட மழை, தார்ப்பாயை தூக்கி கொண்டு ஓடிய பாகிஸ்தான் வீரர்..! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
