
இந்திய கடற்படையில் வேலை செய்ய ஆட்கள் வேண்டும் என அறிவிப்பு ஓன்று வந்துள்ளது. மத்திய அரசு வேலையில் ஆர்வமுள்ளவங்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரசு வேலையில உடனே சேருங்க. இந்த வேலையை பற்றிய விவரங்களை கீழே கொடுத்துள்ளோம். மேலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் இணைத்துள்ளோம்.
Also Read – பட்டதாரிகள் அனைவரும் அரியலூர் கலெக்டர் அலுவலக வேலைக்கு விண்ணப்பிக்கலாம்
Short Service Commission Officer பணிக்காக தான் இந்த வேலை அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்திய கடற்படை. B.E, M.E, B.Tech, M.Tech, Diploma, B.Sc Horticulture, Graduate படித்தவர்கள் இந்த வேலைக்கு தகுதியானவர்களாக கருதப்படுகிறார்கள். இதற்காக 254 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் எந்த இடத்திலும் பணி செய்ய வாய்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று விண்ணப்பத்தாரர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
Also Read – 22 பணிகளுக்கு தேனி மாவட்ட நலவாழ்வுச் சங்கத்தில் காலியிடங்கள் அறிவிப்பு
Short Service Commission Officer பணிக்காக ஒவ்வொரு மாதமும் 56100 ரூபாய் சம்பளம் கொடுக்கப்படும். விண்ணப்பத்தாரர்களை Merit List, Document Verification, Medical Test & Interview முறையில் தேர்வு செய்ய உள்ளது இந்திய கடற்படை. இன்னும் விவரங்களை அறிந்துகொள்ள Indian Navy அறிவிப்பை பார்க்கக்கவும். விண்ணப்பிக்க தகுதியானவராக இருந்தால் Apply Online லிங்கில் விண்ணப்பியுங்கள். விண்ணப்பிக்க கால அவகாசமாக பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
