ஆர்.எஸ்.எஸ், வலதுசாரி அமைப்புகள் இந்தியாவை இந்த ராஷ்டிரம் என்றும், இந்துக்களுக்கான நாடு, இங்கிருப்பவர்கள் இந்துக்கள் என்று தொடர்ச்சியாக கூறிவருகின்றன. அதற்கேற்றாற்போல, பா.ஜ.க அரசும் `ஒரே நாடு ஒரே மதம்” நோக்கி நகர்வதாக எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன.
இப்படியிருக்க ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், “இந்தியா ஓர் இந்து ராஷ்டிரம். கருத்தியல்ரீதியாக இந்தியர்கள் அனைவரும் இந்துக்கள். இந்தியாவிலிருப்பவர்கள் அனைவரும் இந்து கலாசாரம், இந்து முன்னோர்கள், இந்து நிலம் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்கள். சிலர் இதைப் புரிந்துகொண்டனர். அதேசமயம், சிலர் புரிந்துகொண்டும்கூட தங்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் சுயநலத்தால் இதை நடைமுறைப்படுத்தவில்லை” என்று நேற்று கூறியிருந்தார்.
TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: www.vikatan.com
நன்றி
Publisher: www.vikatan.com
