வருமான வரி தாக்கல் செய்துவிட்டு ரீபண்டிற்காக காத்துக்கொண்டிருக்கும் உங்களுக்கு, 10 நாள்களில் ரீஃபண்ட் கிடைத்தால் எப்படி இருக்கும்?
1961-ம் ஆண்டு வருமான வரித்துறை சட்டம் 237 பிரிவின் படி, ஒரு நபர் வருமானத்திற்கு அதிகமாக வரி கட்டியிருப்பதாக சம்பந்தப்பட்ட அதிகாரி அறிந்தால், குறிப்பிட்ட நபருக்கு அளவுக்கு அதிகமாக கட்டியிருக்கும் வரித்தொகையை ரீஃபண்ட் செய்ய முடியும்.
இந்த ரீஃபண்ட் தொகை 2021-22-ம் நிதியாண்டில் 26 நாள்களிலும், 2022-23 நிதியாண்டில் 16 நாள்களிலும் கொடுக்கப்பட்டது. இந்த நாள்களை இன்னும் குறைக்கும் வகையில், அடுத்த நிதியாண்டில் 10 நாள்களில் ரீபண்ட் கிடைக்க செய்யும் நடைமுறையை வருமான வரித்துறை மேற்கொண்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அதிக வரி கட்டியிருக்கிறார்களா? என்பதை சரிப்பார்ப்பது, அது எத்தனை ரூபாய்? போன்ற அனைத்து கணக்குகளும் வரி நிபுணர்கள் மற்றும் அதிகாரிகள் தலைமையில் எலெக்ட்ரானிக் முறையில் நடந்து வருகிறது.
கடந்த காலங்களில் வருமான வரி கணக்கு தாக்கல் செய்து சரிபார்த்த பிறகு திரும்ப பெற வேண்டிய பணம் 20 முதல் 45 நாள்கள் கழித்து கிடைத்து வந்தது. 2022-23 ஆம் நிதியாண்டில் வருமான வரி கணக்குகளை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி செயலாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டன. அதனால் 16 நாள்களாக இது குறைக்கப்பட்டது. தற்போது அது மேலும் 10 நாள்களாக குறையும் என்பது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. ஐடிஆர் தாக்கலில் இது ஒரு புதிய சாதனையாக கருதப்படுகிறது.
நன்றி
Publisher: www.vikatan.com
