SBI வங்கி முக்கிய அறிவிப்பு… நாளை முதல் 20-ம் வரை தேர்தல் பத்திரம் விற்பனை…! முழு விவரம்..

SBI வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்… 100-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

தேர்தல் பத்திரங்களை, 06.11.2023 முதல் 20.11.2023 வரை, பாரத ஸ்டேட் வங்கி அதன் 29 அங்கீகரிக்கப்பட்ட கிளைகள் மூலம் விற்பனை செய்ய மத்திய அரசு அதிகாரம் அளித்துள்ளது. தேர்தல் பத்திரங்கள் வெளியிடப்பட்ட தேதியிலிருந்து 15 நாட்களுக்கு செல்லுபடியாகும். செல்லுபடியாகும் காலம் முடிந்த பின்னர் தேர்தல் பத்திரம் டெபாசிட் செய்யப்பட்டால் எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பணம் செலுத்தப்பட மாட்டாது.

2018-ம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி தேர்தல் பத்திரத் திட்டம் அறிவிக்கப்பட்டு 2022 நவம்பர் 7ஆம் தேதி அதில் திருத்தம் செய்யப்பட்டது. தேர்தல் பத்திரங்களை இந்திய குடிமகனாக இருக்கும் யாரும் வாங்கலாம். ஒரு நபர் ஒரு தனிநபராக இருப்பதால், தனியாகவோ அல்லது பிற நபர்களுடன் கூட்டாகவோ தேர்தல் பத்திரங்களை வாங்கலாம்.

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951-ன் பிரிவு 29 ஏ-ன் கீழ் (1951 -ன் 43) பதிவு செய்யப்பட்ட மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் பதிவான வாக்குகளில் ஒரு சதவீதத்திற்கும் குறையாத வாக்குகளைப் பெற்ற அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தல் பத்திரங்களைப் பெற தகுதி பெறும்.தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு வங்கிக் கிளைக்கு தேர்தல் பத்திரங்களை வெளியிட அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *