வெறும் ரூ.210 முதலீடு செய்தால் வயதான காலத்தில் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை..!! அரசின் சூப்பர் திட்டம்..!!

வெறும் ரூ.210 முதலீடு செய்தால் வயதான காலத்தில் யாரையும் எதிர்பார்க்க தேவையில்லை..!! அரசின் சூப்பர் திட்டம்..!!

தற்போதைய காலகட்டத்தில் சேமிப்பு என்பது அனைவருக்குமே முக்கியமாகிவிட்டது. ஏனென்றால், வயதான காலத்தில் நிதி நெருக்கடியை எதிர்கொள்ள வேண்டியதில்லை. அதற்காக தற்போது பல வகையான ஓய்வூதிய திட்டங்கள் உள்ளன. இதில், அரசாங்கத்தின் அடல் பென்ஷன் யோஜனா திட்டம் மிகவும் பிரபலமானது. 60 வயதிற்குப் பிறகு ஆடம்பரமாக வாழ இத்திட்டம் சிறந்ததாக கூறப்படுகிறது.

இத்திட்டம் 2015-16ஆம் ஆண்டில் ஓய்வூதியத் திட்டமாக தொடங்கப்பட்டது. ஊதியம் பெறுபவர்களுக்கு ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை வழங்கும் நோக்கத்துடன் இது ஆரம்பிக்கப்பட்டது. இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் உங்களுக்கே வழக்கமான வருமானத்தை உறுதி செய்து கொள்ளலாம். இதுவரை 5 கோடிக்கும் அதிகமானோர் இத்திட்டத்தில் இணைந்துள்ளனர்.

நீங்கள் ஓய்வு பெற்றதற்கு பிறகு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரையிலான மாதாந்திர ஓய்வூதியம் பெற, ஒவ்வொரு மாதமும் உங்கள் விருப்பப்படி ஒரு சிறிய தொகையை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் 18 – 40 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். ஒவ்வொரு மாதமும் ரூ.5,000 ஓய்வூதியம் பெற, நீங்கள் APY திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் ரூ.210 முதலீடு செய்ய வேண்டும்.

மேலும், இத்திட்டத்தில் கணக்கைத் தொடங்கத் அந்த நபர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். ஆதாருடன் இணைக்கப்பட்ட சரியான வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். முக்கியமாக, விண்ணப்பதாரரிடம் மொபைல் எண் இருக்க வேண்டும். ஏற்கனவே அடல் ஓய்வூதியத்தின் பயனாளியாக இருக்கக் கூடாது. இதில், குறைந்தபட்ச பங்களிப்பு காலம் 20 ஆண்டுகள் ஆகும்.

அரசின் புதிய விதியின்படி, வருமான வரி செலுத்துபவர்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்திக் கொள்ள முடியாது. இந்த மாற்றம் அக்டோபர் 1, 2022 முதல் அமல்படுத்தப்பட்டது. அடல் பென்ஷன் யோஜனாவில் முதலீடு செய்பவர்களுக்கு வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *