சீனாவின் கிழக்கு ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள ஏரிப்பகுதிக்கு இளம் ஜோடி ஒன்று சென்றுள்ளது. அங்கு இருவரும் ‘லிப்லாக்’ முத்தம் கொடுத்துள்ளனர். அப்போது திடீரென காதலனுக்கு கடுமையான காது வலி ஏற்பட்டுள்ளது. அதன் பின்னர் அவருக்கு சிறிது நேரத்தில் படிப்படியாக கேட்கும் திறனும் குறைந்து கொண்டே வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர், பதறியடித்துக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றார்.
அப்போது அவரது காதின் நடுப்பகுதியில் இருந்து வெளிப்புற பகுதியைப் பிரிக்கும் சிறிய மெல்லிய சவ்வு போன்ற பகுதியில் சிறு அளவிலான 2 துளைகள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, லிப்லாக் முத்தம் கொடுத்தது தான் அவரது காது வலிக்கு காரணம் என்பதை மருத்துவர்கள் அறிந்தனர். உணர்ச்சிவசப்பட்டு கொடுக்கும் முத்தம் காதுக்குள் காற்றழுத்தத்தில் விரைவான மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதையடுத்து, அந்த நபருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் முழுமையாக குணமடைய இரண்டு மாதங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளனர். காதலன், காதலிக்கு கொடுத்த உதட்டு முத்தத்தால் காது கேட்கும் திறனையே இழந்த சம்பவம் காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நன்றி
Publisher: 1newsnation.com
