கடந்த 30 ஆண்டுகளாக அரசுகள் சாலை நுழைவு கட்டணத்தை ரத்து செய்வோம் என்று கூறுகின்றன. ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று கூறினார்.
மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் இது குறித்து கூறுகையில், ”சிறிய வாகனங்களுக்கு சாலைகளில் இருக்கும் டோல்கேட்களில் கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளிக்கப்படும்” என்று தெரிவித்தார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் ராஜ்தாக்கரே சாலைகளில் இருந்த டோல்கேட்களை அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணியில் சேர ராஜ்தாக்கரே திட்டமிட்டு இருந்தார். ஆனால் மகாராஷ்டிரா அரசியலில் கடந்த இரண்டு ஆண்டில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. சிவசேனா இரண்டாக உடைந்து அதில் இருந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணி பா.ஜ.க பக்கம் சென்றதால் அந்த அணிக்கு சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னம் கிடைத்து இருக்கிறது. அதோடு தேசியவாத காங்கிரஸ் கட்சியும் இரண்டாக உடைந்தது. அதில் அஜித்பவார் தலைமையிலான அணி பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்துள்ளது. இரண்டு கட்சிகள் புதிதாக பா.ஜ.க கூட்டணியில் சேர்ந்து இருப்பதால் நவநிர்மாண் சேனாவை பா.ஜ.க.புறக்கணிக்க ஆரம்பித்து இருக்கிறது.
இதனால் ராஜ்தாக்கரே அதிர்ச்சியடைந்துள்ளார். பா.ஜ.க கூட்டணி கிடைக்க கூடும் என்ற ஆசையில் ராஜ்தாக்கரே தனது கட்சியின் கொடி கலரைக்கூட மாற்றினார். அப்படி இருந்தும் பா.ஜ.க. கைவிட்டு இருப்பதால் வரும் மக்களவை தேர்தலில் ராஜ்தாக்கரே தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளார். ராஜ்தாக்கரே தனது கட்சி நிர்வாகிகளை கூட்டி மக்களவை தேர்தல் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து தொகுதியிலும் தனித்து போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது. அதோடு எதிர்காலத்தில் உத்தவ் தாக்கரே அல்லது வேறு கூட்டணியில் சேருவது குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை கட்சி நிர்வாகிகள் ராஜ்தாக்கரேயிடம் வழங்கினர்.
தேர்தலை சந்திக்கும் முன்பாக தொண்டர்களை பழைய நிலைக்கு கொண்டு வரும் நோக்கத்தில் டோல்கேட்களுக்கு எதிரான ஆயுதத்தை ராஜ்தாக்கரே கையில் எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே அம்பேத்கர் பேரன் பிரகாஷ் அம்பேத்கரின் வஞ்சித் பகுஜன் அகாடி கூட்டணியும் மக்களவை தேர்தலில் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இதற்கு முன்பு பிரகாஷ் அம்பேத்கர் உத்தவ் தாக்கரே கூட்டணியில் இடம் பெற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
