IMPA ஏற்பாட்டில் சென்னையில் முதல் முறையாக பன்னிரு திருமுறை திருவிழா மற்றும் மதுரை மீனாட்சி சண்டேஸ்வரரின் திருமண விழா இன்று நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மற்றும் ஆதீனங்கள் கலந்து கொண்டனர். அதைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “மத்திய அரசின் அதிகாரிகளின் கூற்றை சர்டிஃபிகேட் மாதிரி கையில் வைத்துக்கொண்டு பிரசாரம் செய்கிறது தி.மு.க.

ஆனால், அரசு இந்த வெள்ளத்தை கையாண்ட விதம் மோசம் என முதல்வர் ஒப்புக்கொள்ள வேண்டும். குறைந்தபட்சம் 10,000 நிவாரணம் கொடுக்க வேண்டும். மத்திய அரசு 75 சதவிகிதம் கொடுக்கிறது. மாநில அரசு மீதம் 25 சதவிகிதப் கொடுத்து நிவாரண நிதியை வழங்க வேண்டும். மத்திய அரசிடமிருந்து பணம் வரும். அதற்கான நடவடிக்கைகள் இருக்கின்றன. அதெல்லாம் முடிந்து தான் வரும். இது எதுவும் தெரியாமல், பணத்தை விரைந்துக் கொடுங்கள் என முதல்வர் அறிக்கை விட்டிருப்பதும், தமிழ்நாட்டில் வேலை செய்திருப்பதாக காட்டியிருப்பதும் நகைப்புக்குரியது.
மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முதல்வரை வாழ்த்தியது என்பது ஆறுதல் சொல்வதைப் போன்றது. அதை வைத்துக்கொண்டும், நான்கு அதிகாரிகள் கொடுத்த சர்டிஃபிகேட்டை வைத்துக்கொண்டும் அரசியல் பக்குவமில்லாமல் நடந்துக் கொள்வதை இப்போதுதான் பார்க்கிறேன். குறை சொல்வது ராஜ்நாத் சிங் வேலை கிடையாது. இந்த மழையின்போது கழுத்தளவு தண்ணீரில் பா.ஜ.க-வின் தொண்டர்கள் ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று உதவியிருக்கிறார்கள். பா.ஜ.க-வை விட பழைமையான தி.மு.க கட்சியின் தொண்டர்கள் எங்கே சென்றார்கள்.

தேரில் மன்னர் வருவதைப் போல காரில் வந்து, பார்வையிட்டுச் சென்றார் முதல்வர். மத்திய அரசின் அதிகாரிகள் அரசியல் பேசமாட்டார்கள். அதனால்தான் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளை பாராட்டியிருக்கிறார்கள். நானே ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்தால் இந்த அரசை குறை சொல்லமாட்டேன் தான். மத்திய அரசு ஆய்வுக்காக அனுப்பிய அதிகாரிகளின் கருத்தில் நான் உடன்படவில்லை. தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் பாராட்டு மட்டும் தேவை. ஆபத்து நேரத்தில் பாஜக அரசியல் செய்யாது” எனத் தெரிவித்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk
நன்றி
Publisher: www.vikatan.com