“உங்களிடம் டிராக்டர் இருக்கிறது; என்னிடம் சொந்தமாக சைக்கிள்

மத்திய பா.ஜ.க அரசானது, `விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா” என்ற பெயரில், மத்திய அரசின் கிசான் கிரெடிட் கார்டு, கிராமப்புற வீட்டு வசதித் திட்டம், உஜ்வாலா திட்டம், பிரதம மந்திரி ஸ்வாநிதி யோஜனா போன்ற அரசு நலத்திட்டங்களையும், அதன் மூலம் பயன்பெற்றவர்களுக்கு அதனை நினைவுகூரும் வகையிலும் விளம்பர பிரசாரம் ஒன்றை நடத்திவருகிறது. அதன் ஒருபகுதியாக, ஆன்லைன் காணொலி வழியாக, மத்திய அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடன் மோடி உரையாடினார்.

அதில், ஜம்மு காஷ்மீரின் ரங்பூர் கிராமத்தின் சர்பஞ்ச் பல்வீர் கவுர் என்பவருடன் மோடி உரையாடினார். அப்போது, கிசான் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி டிராக்டர் வாங்கியதைப் பற்றி பல்வீர் கவுர் மகிழ்ச்சியாகக் கூற, “உங்களிடம் டிராக்டர் இருக்கிறது. என்னிடம் சொந்தமாக சைக்கிள் கூட இல்லை” என்று மோடி கூறினார். மோடி இவ்வாறு பேசியிருப்பது பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையிலும் இடம்பெற்றிருக்கிறது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *