
நடிகை ரேகா நடித்து உள்ள ‘மிரியம்மா’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் விஜய் வர்மா பங்கேற்றார்.
ஶ்ரீ சாய் பிலிம் பேக்டரி பட நிறுவனத்தின் சார்பில் அறிமுக இயக்குநர் மாலதி நாராயணன இயக்கத்தில் தயாராகி உள்ள முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. இப்படத்தில் நடிகை ரேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரோடு வி.ஜே.ஆஷிக், எழில் துரை, ஸ்நேகா குமார், அனிதா சம்பத், மாலதி நாராயணன் மற்றும் பலர் நடித்து உள்ளனர்.
மேலும் இப்படத்திற்கு எ ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார். அதோடு மூன் ராக்ஸ் குழுவைச் சேர்ந்த இளைஞர்கள் பின்னணி இசை அமைத்திருக்கிறார்கள். ஜேஷன் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை கையாள யாத்திசை புகழ் ரஞ்சித் கலை இயக்குநராகப் பணியாற்றினார். மேலும் பெண்மணிகளை மையப்படுத்தி தயாராகும் இந்த திரைப்படத்தை 72 ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் இயக்குனரான மாலதி நாராயண் தயாரித்து உள்ளார். இந்த படத்தின் டிரைலர் மட்டும் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
Also Read >> குட் நியூஸ்! அரசு ஊழியர்களுக்கு அதிரடி தீபாவளி போனஸ்! முதல்வர் உத்தரவு…!
அதோடு விழாவில் பேசிய நடிகர் ஆஷிக் இந்த மிரியம்மா படத்தின் புராஜக்ட் மிக வேகமாக நடந்து முடிந்திருப்பதாக கூறினார். அதை தொடர்ந்து இந்த படத்தின் வேலைகளை இவ்வளவு வேகமாக முடித்திருக்கும் இயக்குநர் மாலதி நாராயணுக்கு நன்றிகளும் வாழ்த்துக்களும் கூறிக் கொள்கிறேன் என்றும் கூறினார்.
அவரை தொடர்ந்து பிக்பாஸ் சீசனில் இருந்து சமீபத்தில் வெளியேற்றப்பட்ட விஜய் வர்மா பேசியதாவது ” நட்பின் அடிப்படையில் தான் இந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டேன். நான் வெளியேற்றப்படுவேன் என்று நினைக்கவில்லை. மக்கள் தரும் ஆதரவைப் பார்க்கும் போது வியப்பாகவும் சந்தோசமாகவும் இருக்கிறது. மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்து உள்ளே சென்றால் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன்” என்று கூறினார் .
நன்றி
Publisher: jobstamil.in