நடிகை விஜயலட்சுமி விவகாராத்தில், விஜயலட்சுமி, வீரலட்சுமியும் விசாரணைக்கு வரவேண்டும். அப்படி அவர்கள் வந்தால், நானும் வருகிறேன் என சீமான் கூறியதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பதில் அளித்த வீரலட்சுமி, நானும் விஜயலட்சுமியும் வருகிறோம். சீமான் அவரது மனைவியையும், தேன்மொழியையும் அழைத்து வருவாரா? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்நிலையில், இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ”நீ யாரு தேன்மொழி, கயல்விழி வரனும்னு சொல்றதுக்கு? என் பொண்டாட்டி வருவா.. சட்டம் படிச்சிருக்கா.. என் வழக்கறிஞரா வருவா.. என் மனைவி மட்டுமல்ல.. என் வழக்கறிஞர். நீ வா பேசு.. நீ பேசு.. வீரலட்சுமியை வர சொல்லு. தேன்மொழிக்கும் இதுக்கும் என்ன இருக்கு? அவங்க ஆகச் சிறந்த கவிஞர். அவங்களை ஏன் வம்புக்கு இழுக்கனும்?
ஒவ்வொரு வீடா போய் கதவை தட்டி.. அவரு உங்களை இது பண்ணிட்டார்னு சொல்லுங்கன்னு சொல்றானுக.. எதுக்கடா வீடு வீடா போறீங்க? உங்க வீட்டுல இருந்து கூட்டிட்டு வாங்க.. நான் அப்ஜெக்சன் பண்ணாம ஆமான்னு சொல்றேன். இப்படி சொல்லும் போது உங்களுக்கு வலிக்குதுல்ல.. என்னங்கடா நான் என்னமோ அனாதை பய மாதிரி ஆதியில காட்டுல இருந்து இறங்கி வந்த மாதிரின்னு.. எனக்கும் ஒரு குடும்பம் இருக்கு. எனக்கும் ஒரு கூட்டம் இருக்கு.. நடமாட முடியாது ஒவ்வொருத்தனும் நான் நினைச்சா.. பார்த்துக்க கவனமா இருக்கனும்.
எதோ ஒருத்தன்னு நினைச்சுகிட்டு இருக்கான்.. அதிகபட்சம் இரண்டு வருஷம் ஆடுவீங்களா? திமுக இன்னும் 2 வருஷம் ஆளுமா? அதுக்கு அப்புறம்? பார்க்கத்தான் போறோம் தம்பி.. எவ்வளவோ பார்த்துட்டோம்.. என் பங்காளி சொல்ற மாதிரி.. இதென்ன பிரமாதம்.. இன்னும் எவ்வளவோ இருக்கு.. பார்க்கத்தானே போறேன்” என்று பேசினார்.
நன்றி
Publisher: 1newsnation.com
