செப்.14 கடைசி நாள்; ஆதார் கார்டை இலவசமாக அப்டேட் செய்வது

உங்களிடம் ஆதார் கார்டு உள்ளதா? என்று கேட்டால் பெரிய “ஓஓஓ…’ போடுவோம். ஆனால் ‘அது அப்டேட்டாக உள்ளதா?’ என்றால் பெரிய கேள்விக்குறி. பள்ளியில் படிக்கும்போது ஆதார் கார்டு எடுத்து, இப்போது வேலைக்கே சென்று கொண்டிருப்போம். ஆனால் இன்னமும் ஆதார் கார்டில் பள்ளிக்காலத்தில் எடுத்த போட்டோ தான் இருக்கும். அடுத்ததாக, ஆதார் எடுத்ததிலிருந்து ஏகப்பட்ட வீடுகள் மாற்றியிருப்போம். ஆனால் ஆதாரில் மட்டும் ஆதி காலத்து முகவரி இருக்கும்.

இவற்றையெல்லாம் மாற்றத் தான், UIDAI ஜூன் மாதம் வரை ஆன்லைனில் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யும் சலுகையை தந்தது. கடந்த ஜூன் மாதம், UIDAI மீண்டும் இந்த சலுகையை செப்டம்பர் 14-ம் தேதி வரை நீட்டித்தது. ஆதார் கார்டு எடுத்து 10 ஆண்டுகள் ஆகியிருந்தாலும் அல்லது ஏதாவது தகவல்களை ஆதாரில் அப்டேட் செய்ய வேண்டும் என்றாலும் இந்த சலுகையை பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆதாரில் எப்படி அப்டேட் செய்ய வேண்டும்?

  • என்ற இணையதளத்திற்குள் செல்லவும்.

  • உங்கள் ஆதார் எண் மற்றும் கொடுக்கப்பட்டிருக்கும் கேப்சாவை(Captcha) நிரப்பிக்கொள்ளவும்.

  • இதன்பிறகு பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP-யை பூர்த்தி செய்து login செய்யுங்கள்.

  • இதில் ‘Document update’ என்ற டேபிற்குள் சென்று முகவரி, மொபைல் எண் போன்ற மாற்றங்களை செய்துக்கொள்ளலாம்.

  • இந்த மாற்றங்கள் செய்ய அடையாள சான்று, முகவரி சான்று ஆகியவற்றை அப்லோட் செய்ய வேண்டும்.

  • இதில் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம் ஆகியவற்றை மாற்ற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com
Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.

நன்றி
Publisher: www.vikatan.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *