அதேசமயம் 21- 22 நிதியாண்டில் வெளியிட்ட அறிவிப்பில் காட்டப்பட்ட 1.89 லட்ச ரூபாய் மதிப்புள்ள இன்சூரன்ஸ் பாலிசி, 22-23 நிதியாண்டின் அறிவிப்பில் இல்லை.
தேசிய சேமிப்பு சான்றிதழ் வாயிலாக 9.19 லட்சம் ரூபாய் முதலீடு செய்துள்ளார். கடந்த ஓராண்டில் இதில் 14,500 ரூபாய் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடிக்கு கடனோ, வாகனங்களோ, நில சொத்துக்களோ இல்லை.
2020 வரை, பிரதமரிடம் ரூ. 20,000 மதிப்புள்ள உள்கட்டமைப்பு பத்திரங்கள் (Infrastructure bonds) இருந்தன. இவருக்கு பங்குச் சந்தையில் எந்த ஈடுபாடும் இல்லை.
இந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி வரை ஃபிக்ஸட் டெபாசிட்டை தவிர்த்து பிரதமரின் வங்கி இருப்பில் வெறும் 574 ரூபாய் இருந்தது. மேலும் அவரிடம் 30,240 ரூபாய் ரொக்கமாக உள்ளது.”‘ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள சொத்து மதிப்புகள் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?!… கமெண்டில் சொல்லுங்கள்.
நன்றி
Publisher: www.vikatan.com
