உங்க வீட்டுக்கு கரண்ட் பில் எவ்ளோ வருது? முக்கியமான தகவல்… உடனே படிங்க…

How to Calculate EB Bill

How to Calculate EB BillHow to Calculate EB Bill
உங்க வீட்டுக்கு கரண்ட் பில் எவ்ளோ வருது? முக்கியமான தகவல்… உடனே படிங்க… 2

பருவமழை தொடங்கிவிட்டதால் சில நாள் மழையும், சில நாள் வெயிலும் என மாறி மாறி கிளைமேட் மாறிக்கொண்டு தான் இருக்கும். இதனால் அடிக்கடி கரண்ட் கட் ஆகும் சூழ்நிலையும் உருவாகிறது. இதனால் கரண்ட் பில் இந்த மாதம் எவ்வளவு வரும் என பலரும் குழப்பத்தில் இருப்பீர்கள். இனி கவலை வேண்டாம் உங்களுக்கு… நீங்களே எளிய முறையில் கரண்ட் பில் எவ்வளவு வந்துள்ளது என்பதை ஈஸியா கணக்கிடலாம்.

பொதுவாக வீடுகளுக்கு பொருத்தப்பட்டுள்ள மீட்டர் என்பது அதற்கான மின்சார வரைமுறையில் தான் இருக்கும். அதாவது வீடுகளுக்கு Domestic Current Usage என்ற முறையில் தான் மின் கட்டணம் வசூலிக்கப்படும்.

தமிழகத்திலே பொதுவாக மக்களுக்கு முதல் 100 யூனிட்டுகள் இலவசமாக வழங்கப்படுகிறது. அதற்கு பிறகு 101 to 200 யூனிட்டுகள் வரை ரூ.2.25 வசூலிக்கப்படும். 201 to 400 யூனிட்டுகளுக்கு ரூ.4.50 எனவும், 401 to 500 யூனிட்டுகளுக்கு ரூ.6 என வசூலிக்கப்பட்டு வருகிறது.

மேலும், 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தினால் கட்டண முறை அப்படியே மாறி விடும். அதாவது 1 to 100 யூனிட்டுகள் இலவசம். 101 to 400 யூனிட்டுகள் வரை ரூ.4.50 ஆகவும், 401 to 500 யூனிட்டுகள் வரை ரூ.6 ஆகவும், 501 to 600 யூனிட்டுகள் வரை ரூ.8 ஆகவும், 601 to 800 யூனிட்டுகள் வரை ரூ.9 ஆகவும், 801 to 1000 யூனிட்டுகள் வரை ரூ.10 ஆகவும், 1000 மேல் வரும் யூனிட்டுகளுக்கு ரூ.11 ஆகவும், தமிழ்நாடு மின்சார வாரியம் கட்டணம் வசூலிக்கிறது.

இப்போது உங்கள் மின் அளவை கணக்கிட ரீடிங் அட்டையை எடுத்துகொள்ளுங்கள். அதில் கடைசியாக எப்போது ரீடிட் எடுக்கப்பட்டது என பாருங்கள். கடந்த 2 மாதங்களில் எடுத்து இருந்தால் அதனை வைத்து உங்களுடைய கடைசி மீட்டர் ரீடிங் என்ன என்பதை அறிந்துகொள்ள முடியும். இப்போது உங்கள் மீட்டரில் என்ன வருகிறது என அறிந்து கழித்து பார்த்தால் எத்தனை யூனிட்டுகளை பயன்படுத்தியுள்ளோம் எனவும், மேல குறிப்பிட்டுள்ள விலை பட்டியளில் படி பிரித்து கணக்கிட்டால் உங்களுடைய EB பில் என்ன என்பதை அறியலாம்.

ஒருவேளை உங்களுடைய மின் அட்டை இல்லை என்றால், தமிழக அரசின் மின்சார துறையின் இந்த அதிகாரபூர்வ இணையதளத்தில் சென்று, உங்கள் மீட்டர் எண்ணை உங்கள் கணக்கோடு இணைக்க வேண்டும். இவ்வாறு இணைத்த பிறகு, உங்களுடைய EB பில்கள், எப்போது EB பில் கட்ட வேண்டும் போன்ற அனைத்து தகவல்களையும் எளிதில் அறியலாம். மேலும், என்ற இந்த வெப்சைட் மூலமாகவும் எளிதாக கணக்கிட்டு அறியலாம்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *