கர்நாடக மாநிலம், பெங்களூரில் நடந்த காங்கிரஸ் நிகழ்ச்சி ஒன்றில் காங்கிரஸ் தலைவரும், கர்நாடக முதல்வருமான சித்தராமையா கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “இந்துத்துவா வேறு… இந்து வேறு. நான் இந்து. நாம் ராமரை வணங்க மாட்டோமா… அவர்கள் (பா.ஜ.க.) மட்டும்தான் வணங்குகிறார்களா… ராமர் கோயில்களை நாம் கட்டவில்லையா… ராமர் பஜனைகளை நாம் பாடவில்லையா… எங்கள் கிராமத்தில் டிசம்பர் கடைசி வாரத்தில் மக்கள் பஜனை பாடுவார்கள்.
அந்த பஜனைகளில் நானும் பங்கு கொள்வேன். இது போன்ற நிகழ்வுகள் மற்ற கிராமங்களிலும் நடைமுறையில் இருக்கின்றன. அவர்கள் (பாஜக) மட்டும்தான் இந்துவா… நாங்கள் இந்துக்கள் இல்லையா…. எனவே, இந்துத்துவா என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இந்துத்துவா வேறு, இந்து தர்மம் வேறு. நான் இந்து மதத்திற்கு எதிரானவன் அல்ல…
நன்றி
Publisher: www.vikatan.com
