மேலும் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில், உணவுப் பொருட்களை கண்ணாடி பெட்டியில் வைக்காதது பற்றியெல்லாம் ஆய்வு செய்து கேள்வி எழுப்பி, உடனே மாற்றும்படி கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக சுற்றுச்சுவர் பற்றி ஆய்வு மேற்கொண்ட அந்தக் குழுவினர், வீடூர் அணையில் தூர்வாருதல் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள விரைந்தது. அப்போது விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்களை நிறுத்தக்கூறிய வேல்முருகன், அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது டோல்கேட் அதிகாரிகளிடம், “30 விநாடிகளுக்கு மேல் வண்டி நிற்கக்கூடாது. வெள்ளி, ஞாயிறு இரவுகளில் மூன்று மணி நேரத்திற்கு மேல் நிற்க வைக்கிறீர்கள். இது எந்த விதத்தில் நியாயம். இந்திக்காரர்களுக்கு வேலை, உள்ளூர் காரர்களுக்கு இல்லையா..?” என்றெல்லாம் கேள்வி எழுப்பியதோடு, விவசாயிகள், பத்திரிகையாளர்களை இலவசமாக அனுமதிக்க வேண்டும். ஆம்புலன்ஸூக்கு தனிவழி எங்கே? எனவும் கேட்டு கடுமை காட்டியிருந்தார்.


அதைத் தொடர்ந்து வீடூர் அணை, கூட்டேரிப்பட்டு மேம்பாலம், திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் ஆகிய கட்டுமான பணிகளை பார்வையிட்டவர்கள்… விக்கிரவாண்டி, அரசினர் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதியில் மதிய உணவின் தரம் குறித்த ஆய்வு செய்துவிட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளை சந்தித்து விசாரித்தனர். அதனைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து துறை அலுவலர்களுடனான உறுதிமொழிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தில் நிலுவையில் இருந்த 222 உறுதிமொழிகள் குறித்து அதில் விவாதிக்கப்பட்டது.
நன்றி
Publisher: www.vikatan.com