இந்த வழக்கு நீதிபதி சிவஞானம் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் கிராமசபைக் கூட்டத்தில் நடந்த சம்பவத்துக்கு நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகத் தெரிவிக்கப்பட்டது.
“கிராமசபைக் கூட்டத்தில் பொதுமக்கள் முன்னிலையில் விவசாயியைத் தாக்கியதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. பொது இடத்தில் அரசு அலுவலர்கள், அதிகாரிகள் முன்பு கேள்வி கேட்ட விவசாயிமீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இது சட்ட ஒழுங்கு பிரச்னை. எனவே அவருக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது.

விவசாயி அம்மையப்பன் தரப்பு வழக்கறிஞர், “ஊராட்சிச் செயலரான தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்தையும் பதிவுசெய்துகொண்ட நீதிபதி, “தாக்கப்பட்டவருக்கு வெளிப்புற காயங்கள் எதுவும் இல்லை. எனவே தங்கபாண்டியனுக்கு முன்ஜாமீன் அனுமதிக்கப்படுகிறது. வாரத்தில் ஒருநாள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்” என உத்தரவிட்டார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
