Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION
மாரடைப்பு ஏற்படுவதற்கு ஒருநாளுக்கு முன் சில அறிகுறிகள் தென்படும் என்றும், அவை ஆண், பெண் இரு பாலினத்தவருக்கும் வேறுபடும் என்றும் அமெரிக்க ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் 3 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் அதிகமான மாரடைப்பு நோயாளிகள் மருத்துவமனைகளை நாடுகின்றனர். அதில் சுமார் 90% விழுக்காட்டினர் இறப்பை சந்தித்தனர் என்று கூறப்படுகிறது. இதில் பலருக்கும் திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி தான் காரணமாக அமைந்துள்ளது. ஆனால், சிடார்ஸ்-சினாய் ஹெல்த் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மிட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் மருத்துவ ஆய்வாளர்கள், திடீர் மாரடைப்பை அனுபவிக்கும் மக்களில் பாதி பேர் 24 மணி நேரத்திற்கு முன்பே அறிகுறிகளை உணர்ந்துள்ளனர் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு அறிகுறிகளில் வேறுபாடு இருக்கும் எனவும் ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தி உள்ளனர். இந்த ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் லான்செட் டிஜிட்டல் ஹெல்த்ரஸ்டட் இதழில் வெளியிடப்பட்டது.
மாரடைப்பின் பிற அறிகுறிகள்:. வேகமாக இதயம் துடிப்பது, தலைச்சுற்றல், நெஞ்சு வலி, மூச்சுத் திணறல், குமட்டல் அல்லது வாந்தி, மயக்கம் ஆகும். மாரடைப்பை வருமுன் தெரிந்துகொள்வது எப்படி? மருத்துவர்கள் ஆணுக்கு ஒரு அறிகுறியும் பெண்ணுக்கு வேறுமாதிரி அறிகுறியும் இருக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளனர். இருதய மின் இயற்பியல் நிபுணரும், சிடார்ஸ்-சினாய் ஹெல்த் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மிட் ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் மாரடைப்பு தடுப்பு மையத்தின் இயக்குநருமான மருத்துவர் சுமித் சக் இதுகுறித்த ஒரு தெளிவான புரிதலை முன்வைத்துள்ளார்.
மார்பக புற்றுநோயின் அறிகுறிகள் எப்படி இருக்கும்? இவர் தலைமையில் தான் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதில் பெண்களுக்கு மாரடைப்பு வரும் 24 மணிநேரத்திற்குள் எப்போதாவது மூச்சு விடுவதில் பிரச்னை இருக்கும் என்றும் ஆண்களுக்கு நெஞ்சு வலி அறிகுறிகள் இருக்கும் என்றும் சுமித் சக் தெரிவித்துள்ளார். மேலும் பெண்களுக்கு ஏற்படும் அசாதரண மூச்சுத்திணறலால் மிகவும் ஆபத்தான மாரடைப்பு வரும் எனவும், இதில் ஆண்களுக்கான ஆபத்து ஒருபடி குறைவு என்றும் அவர் விளக்கியுள்ளார். எனவே, அசெளகரியங்கள் தென்படும்போது உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வது உயிரைக் காக்கும் என அறிவுரை வழங்கியுள்ளார்.
The post திரும்பிய பக்கமெல்லாம் மாரடைப்பு செய்தி!… ஒருநாளுக்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்!… கவனமாக இருங்கள்! appeared first on Tamil News Online | Latest News in Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ் | Tamilnadu News -1NEWSNATION.
நன்றி
Publisher: 1newsnation.com
