கொரோனாவால் நிகழும் மாரடைப்பு..!! நீங்களும் பாதிக்கப்பட்டவரா..? தீர்வு என்ன..? மத்திய அமைச்சர் விளக்கம்..!!

கொரோனாவால் நிகழும் மாரடைப்பு..!! நீங்களும் பாதிக்கப்பட்டவரா..? தீர்வு என்ன..? மத்திய அமைச்சர் விளக்கம்..!!

இந்தியாவில் முன்பு மாரடைப்பு என்பது வயதானவர்கள் மற்றும் இணைய நோய் உள்ளவர்கள் மத்தியில் தான் அதிகம் காணப்பட்டது. ஆனால், இப்போது இளைஞர்கள், அவ்வளவு ஏன் சிறியவர்கள் மத்தியிலும் கூட மாரடைப்பு அதிகம் ஏற்படுகிறது. அதிலும் கொரோனாவுக்கு பிறகு இளைஞர்கள் மத்தியில் இதுபோல ஏற்படும் மாரடைப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதற்கு ஒவ்வொருவரும் ஒரு காரணத்தைச் சொன்னாலும் கூட யாருக்கும் உறுதியாக என்ன காரணம் எனத் தெளிவாகத் தெரியவில்லை.

இதற்கிடையே, இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரிப்பது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். இது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விரிவான ஆய்வை நடத்தியுள்ள நிலையில், மாரடைப்பிற்கான காரணத்தை விளக்கினார்.

கொரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள் மாரடைப்பு மற்றும் இதய பாதிப்பை தடுக்க ஓரிரு ஆண்டுகள் கடுமையாக உழைக்கக் கூடாது என்றும் ஓய்வு எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்யக்கூடாது என்றும் மன்சுக் மாண்டவியா அறிவுறுத்தினார். இதன் மூலம் மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் குஜராத் நவராத்திரி விழாவில் நடந்த ‘கர்பா’ நடனத்தின் போது அடுத்தடுத்து பலருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது. குறிப்பாகப் பதின்ம வயதில் இருப்போருக்கும் கூட மாரடைப்பு ஏற்பட்டது. இது மட்டுமின்றி நாடு முழுக்கவே இளைஞர்கள் மத்தியிலான மாரடைப்பு கடந்த சில காலமாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் போது மாரடைப்பு, விளையாடும் போது மாரடைப்பு என்று இளைஞர்கள் மத்தியில் மாரடைப்பு அதிகரித்தே வந்தது.

கொரோனாவுக்கு பிறகு இந்த மாரடைப்பு அதிகரித்துள்ள நிலையில், இது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கு கொரோனாவால் பாதித்த அனைவருக்கும் மாரடைப்பு ஏற்படுமோ என்று அஞ்சினர். இந்தச் சூழலில் தான் மன்சுக் மாண்டவியா இந்த விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், “ஐசிஎம்ஆர் இது குறித்த விரிவான ஆய்வை நடத்தியது. அதன்படி கடுமையான கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக வேலை செய்யக் கூடாது. மாரடைப்பு ஏற்படாமல் இருக்க, கடினமான உடற்பயிற்சி வேகமாக ஓடுவது, ஜிம்மில் நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஓரிரு ஆண்டுகள் இதுபோல தவிர்க்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.

Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: 1newsnation.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *