நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுன் பஞ்சாயத்தில் தூய்மைப் பணியாளராக வேலை செய்த சுந்தரம். கடந்த 2017-ம் ஆண்டு உயிரிழந்தார். 58 வயதான அவரின் மனைவி படுத்த படுகையாக உள்ளார். அவரை, இவர்களின் பேத்தி கீர்த்தனாதான் கவனித்து வருகிறார். தன் பாட்டியைப் பார்த்துக்கொள்ள தன்னிடம் போதுமான பொருளாதார வசதி இல்லாததால், தன் தாத்தா பார்த்த வேலையை, கருணை அடிப்படையில் தனக்கு வழங்குமாறு அரசுக்குக் கோரிக்கை மனு அளித்துள்ளார்.
அரசு அதைப் பரிசீலிக்கவில்லை என்பதால் கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு, நீதிபதி சதீஷ்குமார் தலைமையிலான அமர்வுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது பேசிய கீர்த்தனா தரப்பு வழக்கறிஞர் ராகவாச்சாரி, `கீர்த்தனாm தன் சிறுவயதிலேயே தாயை இழந்துள்ளார், தந்தையும் அவரை பாதுகாக்காமல் விட்டுச் சென்றுவிட்டார். எனவே, இவரை சிறு வயது முதல் அவரின் தாத்தா, பாட்டிதான் வளர்த்துள்ளனர். தாத்தா சுந்தரம் உயிரிழப்பதற்கு முன்பாக தன் பணி புத்தகத்தில் தன் முதல் வாரிசாக மனைவியையும் இரண்டாவது வாரிசாகப் பேத்தியையும் குறிப்பிட்டுள்ளார்.
நன்றி
Publisher: www.vikatan.com
