
சென்னையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் முதலைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அதில் பேசிய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் காலியாக உள்ள 50 ஆயிரம் அரசு பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்துள்ளார்.
ALSO READ : பள்ளி மாணவர்களுக்கு இஸ்ரோ வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..! இளம் விஞ்ஞானிகள் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரெடியா இருங்க…
இந்த அறிவிப்பு குறித்து பல விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழக அரசு இது குறித்த விளக்கத்தை தற்போது தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் காலியாக உள்ள பணியிடங்களில் 60 ஆயிரத்து 567 பேரை அரசு பணியில் நியமித்துள்ளதாக கூறியிருக்கிறது. மேலும் டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடை பணியாளர் தேர்வாணையம் போன்ற தேர்வுகளை நடத்தி 27, 858 பேரை இந்த ஆண்டு ஜனவரி வரை பணியில் அமர்த்தியுள்ளது.
மேலும் தமிழக அரசு 32, 709 பேரை அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் வேலை வழங்கியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் பள்ளிக்கல்வித்துறையில் 1847 பேரும், நீதித்துறையில் 5981 பேரும், வருவாய்த்துறையில் 2996 பேரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. சுகாதாரத்துறையில் 4286 பேருக்கும், உயர்க்கல்வித்துறையில் 1300 பேருக்கும், ஊரக வளர்ச்சித்துறையில் 857 பேருக்கும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் தமிழக அரசு காவல்துறை , வேளாண்மை, நகராட்சி, சமுக நலம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் 15, 442 பணியிடங்களை நிரப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. இதை தவிர சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில் படித்த இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கூறியுள்ளது. எனவே இவ்வளவு பணியிடங்களில் அரசு வேலை வாய்ப்பு வழங்கியதாக விளக்கம் அளித்துள்ளது.
அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்
நன்றி
Publisher: jobstamil.in
