தொழில் நிறுவனங்கள் மானியங்களையும், வரிச்சலுகைகளையும்விட நிலைத்தன்மையையே முக்கியமாக நினைக்கின்றன. அடுத்த 5 – 10 ஆண்டுகளுக்கு பெரிய மாற்றம் எதுவும் இருக்கக்கூடாது என்று விரும்புகின்றன.

உலகளவில் பல பெரிய நிறுவனங்கள் சீனாவை மட்டும் நம்பி இருக்காமல், பல்வேறு நாடுகளில் தங்கள் தொழிற்சாலையைத் தொடங்குகின்றன. செமி கண்டக்டர், எலெக்ட்ரிக் வாகனங்கள், ஏரோஸ்பேஸ் போன்ற துறைகளில் விரிவாக்கம் நடைபெற 5 முதல் 10 ஆண்டுகள் வரை ஆகும். இதை இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பலமான உற்பத்தித் துறையை உருவாக்குவதால் இந்தியா பயனடையும். ஐ.டி துறையை மட்டும் நம்பி இருக்க வேண்டும் என்பதில்லை. ஆட்டோமொபைல், வீட்டு உபயோக பொருள்கள், எலெக்ட்ரானிக்ஸ் போன்ற துறைகளில் பலமான தொழில் துறை இருக்கிறது” என்று பேசியிருக்கிறார்.
10 டிரில்லியன் டாக்கெட் என்கிற இலக்கு நிறைவேறுவது மத்திய, மாநில அரசுகளிடம் மட்டுமல்ல, தொழில் நிறுவனங்களிடமும் மக்களிடமும் இருக்கிறது என்பதை மறுக்க முடியாது!
நன்றி
Publisher: www.vikatan.com
