10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் – நாளை வெளியீடு

Hall Ticket for 10th Class Students - Release Tomorrow

ஆண்டுதோறும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வருகிற மார்ச் 1 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளது. அதேபோல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு மார்ச் 26 ஆம் தேதி தொடங்கப்பட்டு ஏப்ரல் 8 ஆம் தேதி முடிவடைய உள்ளது. இந்நிலையில், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தனித்தேர்வர்கள் இதனை முழுமையாக படிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Also Read > விஜய் எடுக்கப்போகும் அடுத்தக்கட்ட முயற்சி..? மதுரை மக்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!!

2023-24 ஆம் கல்வி ஆண்டில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதப்போகும் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, தனித்தேர்வர்கள் இந்த செய்முறை தேர்வுகளை பயிற்சி பெற்ற அதே பள்ளியிலேயே எழுதிக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 10 ஆம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் நாளை பிற்பகல் 2 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்ய கீழ்காணும் முறையினை பின்பற்ற வேண்டும்.

  • தனித்தேர்வு எழுதும் மாணவர்கள் அரசு தேர்வுகள் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.dge.tn.gov.in என்ற தளத்திற்கு செல்ல வேண்டும்.
  • அதில், ஸ்எஸ்எல்சி பப்ளிக் எக்ஸாமினேஷன் மார்ச்/ ஏப்ரல் 2024 ஹால் டிக்கெட் டவுன்லோட் என்பதை கிளிக் செய்ய வேண்டும்.
  • பின்பு, அதில் கேட்கப்படும் விண்ணப்ப எண், பதிவெண் மற்றும் பிறந்த தேதி போன்ற விவரங்களை உள்ளிட்டு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்


Facebook
fb-share-icon
Telegram
WhatsApp

TekTamil.com

Disclaimer: This story is auto-aggregated by a computer program and has not been created or edited by TekTamil.
நன்றி
Publisher: jobstamil.in

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *