ஆனால், காவல்துறை சார்பில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளவில்லை. இதையடுத்து, அவர் சேலம் நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் பியூஷ் மானுஷ். அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், `இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்கிறோம். அதே நேரத்தில் தமிழக அரசின் அனுமதியை வாங்க வேண்டும்’ என உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்துக்கு அந்தப் புகார் மனுவை அனுப்பிய பியூஷ் மானுஷ், அவரிடம் அனுமதி கோரினார்.
ஆட்சியர் கார்மேகம், இந்த மனுவை அரசுக்கு அனுப்பிவைத்தார். அரசு வழக்கறிஞர்கள் பரிசீலனை செய்து, `இது தொடர்பாக வழக்கு பதிவுசெய்வதற்கான காரணங்கள் இருக்கின்றன. எனவே, வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தலாம்’ எனக் கூறி, கடந்த 18-ம் தேதி அனுமதி அளித்தனர். இந்த வழக்கு அடுத்த மாதம், நான்காம் தேதி சேலம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அதைத் தொடர்ந்து, பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பப்பட்டு, விசாரணை தொடங்கும் எனக் கூறப்படுகிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்…
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்…
நன்றி
Publisher: www.vikatan.com
