தமிழ்நாட்டில் தி.மு.க அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையிலான மோதலானது, உச்ச நீதிமன்றத்தில் தற்போது வழக்கு விசாரணையாக நடைபெற்றுவருகிறது. இதில், `சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும்” என்ற முக்கிய கோரிக்கை தமிழ்நாடு அரசுத் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றமும், `மசோதாமீது மாற்றுக் கருத்து இருந்து திருப்பியனுப்புவதாக இருந்தால், உடனடியாகத் திருப்பியனுப்ப வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்திவைக்க முடியாது’ என ஆளுநர் தரப்புமீது கொட்டு வைத்தது.


முதல்வர் ஸ்டாலின்
உச்ச நீதிமன்றம் இவ்வாறு கூறியதுமே, தமிழ்நாடு அரசின் பல்கலைக்கழக மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்களுக்கு விளக்கம் கேட்டு, அவற்றை அரசுக்கே திருப்பியனுப்பினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அதன் பின்னர், நவம்பர் 18-ம் தேதி சபாநாயகர் அப்பாவு முன்னிலையில் சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, ஆளுநரால் திருப்பியனுப்பப்பட்ட மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, ஒப்புதல் பெற மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டன. இவ்வாறான சூழலில், தமிழ்நாடு அரசின் மனுமீதான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் நடந்தது.
நன்றி
Publisher: www.vikatan.com